டெபாசிட்டுக்கான வட்டி மட்டுமல்ல, கடனுக்கான வட்டியும் உயர்வு; எந்தெந்த வங்கி என்னென்ன வட்டி? - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, June 10, 2022

டெபாசிட்டுக்கான வட்டி மட்டுமல்ல, கடனுக்கான வட்டியும் உயர்வு; எந்தெந்த வங்கி என்னென்ன வட்டி?

வட்டியை முதலில் உயர்த்துவது யார் என்கிற போட்டியில் தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவும் முன்னணியில் உள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியானது 0.50% என்கிற அளவில் வட்டியை தற்போது உயர்த்தி இருக்கிறது. இதன்மூலம் அந்த வங்கி தரும் கடனுக்கான வட்டி 8.60 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. பேங்க் ஆஃப் பரோடா வங்கியானது வட்டியை உயர்த்தியபின் 7.40 சதவிகிதமாக உள்ளது. ஹெச்.டி.எஃப்.சி வங்கியானது வீட்டுக்கடனுக்கான வட்டியை 0.50% உயர்த்தியுள்ளது. கடந்த மாதம் 4-ம் தேதி முதல் இந்த வங்கி மொத்தம் .85% வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிற அதேவேளையில், சில வங்கிகள் பிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தத் தொடங்கியுள்ளன. கோட்டக் மஹிந்திரா வங்கியானது வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கில் ரூ.50 லட்சத்துக்குமேல் வைத்திருக்கும் பணத்துக்கு 0.50% வட்டி விகிதத்தை உயர்த்தி, 4% தரப்படும் என அறிவித்துள்ளது. இதற்கு முன்பு இது 3.50 சதவிகிதமாக இருந்தது. அதேபோல, 365 - 389 நாள்களுக்கான டெபாசிட்டுகளுக்கு 0.10%, 390 நாள்களுக்கான டெபாசிட்டுக்கு 0.25% வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

இனிவரும் நாள்களில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை சேர்ந்த வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தையும், டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தையும் உயர்த்தும் என எதிர்பார்க்கலாம்!

No comments:

Post a Comment