கல்வி நிலையங்களில் கொரோனா அதிகரிப்பு: அமைச்சர் விளக்கம் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, June 1, 2022

கல்வி நிலையங்களில் கொரோனா அதிகரிப்பு: அமைச்சர் விளக்கம்

சென்னையின் தேனாம்பேட்டையிலுள்ள, டி.எம்.எஸ் வளாகத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மா.சுப்பிரமணியன், கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் விளக்கமளித்தார். மா.சுப்பிரமணியன், “கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகத் தமிழகத்தில் தொற்றின் எண்ணிக்கை என்பது 100-க்கும் கீழே தொடர்ந்து பதிவாகி வருகிறது. இறப்பு இல்லாத நிலை என்பது தொடர்ந்து கொண்டும் இருக்கிறது. இந்த நிலையில் அதிகரிக்கிறது. அதற்கான காரணம் என்பது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொற்றின் எண்ணிக்கை என்பது இன்னமும் கட்டுக்குள் வராமல் இருக்கிறது. குறிப்பாக டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் தொற்றின் எண்ணிக்கை கூடுதலாகிக் கொண்டிருக்கின்ற சூழலில், வடமாநிலங்களிலிருந்து வருகிற மாணவர்கள் இந்த இந்த கல்வி நிறுவனங்களுக்கு வருகின்றபோது அவர்களின் மூலம் ஒட்டுமொத்தமாக இந்த தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இந்த தகவல் சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்குத் தெரிந்து, அதற்குப் பிறகு ஐ.ஐ.டி-யில் நானும், துறையின் செயலாளரும் இரண்டு மூன்று முறை நேரடியாகச் சென்று அவர்களைப் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, விடுதியில் தங்கியிருந்த 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் 237 மாணவர்களுக்குத் தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. தற்போது அவர்கள் அனைவரும் குணமாக்கப்பட்டு நல்ல முறையில் தங்கிப் பயின்று கொண்டிருக்கிறார்கள். அதேபோல் அண்ணா பல்கலைக்கழகத்தில் 23 பேருக்குத் தொற்று ஏற்பட்டது. இன்றைக்கு அதுவுமே கட்டுக்குள் வந்து தற்போது முழுமையாக இறங்கி, கடந்த இரண்டு நாள்களாக இருபத்தி மூன்று என்ற எண்ணிக்கையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொற்று இருக்கிறது. மா.சுப்பிரமணியன் சத்யசாய் பல்கலைக்கழகத்தில் அதே போல் தான் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக பேர் வந்து தங்கிப் பயில்வதால் அங்கேயும் தொற்று ஏற்படத் தொடங்கி 74 பேர் அளவுக்குத் தொற்று வந்து, அங்கே இப்போது பூஜ்ஜிய நிலையில் தொற்று இருந்து கொண்டிருக்கிறது. ஐ.ஐ.டி-யிலும் சத்ய சாய் பல்கலைக்கழகத்திலும் பூஜ்ய நிலையில் தொற்று எண்ணிக்கை இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 23 எண்ணிக்கையில் தொற்று இருக்கிறது. வி.ஐ.டி-யில் முதலாமாண்டு மாணவர்கள் மட்டும் 5600 பேர் தங்கிப் பயின்று கொண்டிருக்கிறார்கள். இதில் 80 சதவிகித மாணவர்கள் வட மாநிலங்களிலிருந்து வந்து தங்கி பயில்பவர்கள். அவர்கள் 12, 13-ம் தேதிகளில் இங்கே விடுதிக்கு வந்து தங்கத் தொடங்கியிருக்கிறார்கள் அவர்களுக்குள் ஏற்பட்ட இந்த தொற்று என்பது மளமளவென பரவி இப்போது 118 என்கிற எண்ணிக்கையில் இருக்கிறது. மேலும் இன்று பிற்பகல் 12 மணி வரை வந்திருக்கின்ற எண்ணிக்கையின்படி 45 பேருக்குத் தொற்று இன்னமும் கூடுதலாக வந்திருக்கிறது. இன்னும்கூட 1500 பேருக்குப் பரிசோதனை செய்ய வேண்டும்” என கொரோனா தொற்று குறித்து விளக்கமளித்தார்.

No comments:

Post a Comment