அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை: மாணவர்களை ஏமாற்றும் போலி மின்னஞ்சல் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, June 10, 2022

அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை: மாணவர்களை ஏமாற்றும் போலி மின்னஞ்சல்

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு இடம் இருப்பதாக கூறி முன்பணம் கேட்டு வரும் மின்னஞ்சல்கள் போலியானவை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுபற்றி அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- “அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு இடம் இருக்கிறது என்றும் முதல் செமஸ்டர் கட்டணத்துடன் ரூ. 1 லட்சம் கட்டினால் முற்றிலும் இலவசமாக படிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு செய்துள்ளது போன்று போலி மின்னஞ்சகள் பல மாணவர்களுக்கு சென்றுள்ளது. குறிப்பாக என்.ஆர்.ஐ. மாணவர்களை குறி வைத்து அனுப்பப்படும் இந்த மின்னஞ்சல்கள் போலியானது. இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு www.annauniv.edu என்ற இணைய தளத்தை மட்டுமே அணுக வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment