டெல்லியில் 5 வயது சிறுமியின் கை, கால்களை கயிற்றில் சுற்றி மொட்டை மாடியில் கொளுத்தும் வெயிலில் விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியின் கராவல் துக்மீர்பூர் நகரில் வசித்து வருபவர் ராஜ்குமார் மற்றும் சப்னா. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் வீட்டு பாடம் செய்யவில்லை என்பதால் 1ஆம் வகுப்பு படிக்கும் 5 வயது மகளை அடித்தார்.மேலும் அந்த சிறிய குழந்தையை மொட்டை மாடிக்கு இழுத்து சென்று கை, கால்களை கயிறு போட்டு இறுக கட்டி உச்சி வெயிலில் அந்த குழந்தையை விட்டுவிட்டார்.வெயில் அதிகம்வெயில் அதிகரித்ததால் அந்த சிறுமி சுருண்டு படுத்துள்ளார். நேரம் ஆக ஆக சிறுமியால் வெப்பத்தை தாள முடியாததால் அவர் அழுதுள்ளார். இதனால் சப்தம் கேட்டு பக்கத்தில் இருந்த சிறுமியின் மாமா சுனில் உள்ளிட்ட உறவினர்கள் ஓடி சென்று சிறுமியின் கட்டுகளை அவிழ்த்து அவரை கீழ் கொண்டு வந்தனர்.
குழந்தைகளின் மாமா
இதுகுறித்து சுனில் கூறுகையில் ஒவ்வொரு முறையும் சிறிய பிரச்சினைகளுக்குக் கூட இரு குழந்தைகளையும் கண்மூடித்தனமாக தாக்கும் குணம் கொண்டவர் அந்த தாய். பொதுவாகவே சப்னா கோபக்கார பெண். அவர் அடிக்கும் போது நாங்கள் யாராவது தடுத்தால் கூட அந்த குழந்தைகள் மீது அதிக அடி விழும்.
என் குழந்தை
மேலும் "இது என் குழந்தை, அதை அடிக்க எனக்கு உரிமை இருக்கிறது" என அந்த தாய் கூறிவிடுவார். இதற்கு முன்னர் இப்படி நடந்ததில்லை. கடந்த 2, 3, ஆண்டுகளாகத்தான் இப்படி நடந்து கொள்கிறார். மேலும் குடும்ப உறுப்பினர்களுடன் எப்போதும் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டிருந்தவர்.
கோபம் வந்தால் போச்சு
மகளிடம் மட்டும் அல்ல, மகனையும் கோபம் வந்தால் கடுமையாக அடிப்பவர் சப்னா. கேட்டால் அடி அதிகம் விழும் என்பதால் குழந்தைகளுக்காக அவரை நாங்கள் எதுவும் கேட்காமல் விட்டு விடுவோம் என கூறியுள்ளார். இதே போன்று பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரதீப் என்பவர் கூறும் போது குழந்தைகளின் அழுகை சப்தம் எப்போதும் வீட்டில் இருக்கும்.
தாய் மீது வழக்கு பதிவு
குளிர் காலத்தில் கூட அவர்களது ஆடையை கழற்றி கடுங்குளிரில் நிற்க வைத்த சம்பவமும் நடந்துள்ளது. இதன் பின்னர் பக்கத்தில் வசிப்பவர்கள் குழந்தைகளுக்கு ஆடைகளை கொடுத்தனர். இதற்காக அவர்களிடமும் சப்னா மல்லுக்கு நின்றார் என்றார். இது தொடர்பாக தாய் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment