(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அரசுப் பள்ளிகளில் பயின்று, உயர் கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித் தொகை வழங்கும் திட்டத்தில் பயன் பெற தகுதியான மாணவியரின் விவரங்களை https://penkalvi.tn.gov.in/ இணையதளத்தில் 30.06.2022 க்குள் உள்ளீடு செய்தல் சார்ந்து உயர் கல்வித் துறை செயலாளரின் சுற்றறிக்கை!
Girls Monthly Scholarship Proceedings – Download here…
தொழில்நுட்பக் கல்வி , கலை மற்றும் அறிவியல் கல்வி இளநிலை ( Under Graduate ) பயிலும் மாணவியர்களுக்கான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு பின்வரும் வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது . ,
தற்போது இத்திட்டத்தினை செயல்படுத்த https://penkalvi.tn.gov.in என்ற முகவரியில் இணைய தளம் துவக்கப்பட்டுள்ளது.
மேற்காண் இணைய தளத்தில் , இத்திட்டத்தில் பயன்பெறும் விவரங்களை 25.06.2022 மாணவியர்களின் முதல் 30.06.2022 க்குள் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உடனடியாக அந்த இணைய தளத்தில் பதிவிடப்பட வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் ( Government Schools , Corporation Schools , Municipal Schools , Panchayat Union Schools , Adi Dravidar and Tribal Welfare Schools , Kallar Reclamation Schools , Forest Department Schools and other Schools managed by Government departments ) 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதிக் கல்லூரிகள் / நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை தொடரும் மாணவியர் இத்திட்டத்தில் பயன்பெறுவர்.
இத்திட்டத்திற்கென இளநிலை ( Under Graduate ) பயிலும் மாணவியரிடமிருந்து அவர்களது சுய விவரங்கள்
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
, வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பயின்ற அரசு பள்ளி விவரங்கள் கோரப்படுகின்றன.
மாணவியர்கள் கீழ்க்கண்ட ஆவண நகல்களை அறிவுறுத்தல் வேண்டும்.
1. ஆதார் நகல் ,
2. வங்கி கணக்கு புத்தக நகல் ,
3. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் ,
4. பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் .
* விவரங்கள் சார்ந்த மாணவியர் மற்றும் பொறுப்பாசிரியர்கள் ( Tutor ) மூலம் உள்ளீடு செய்யப்பட வேண்டும்.
சரியான விவரங்கள் உள்ளீடு செய்யப்படுவதை சார்ந்த துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
* மாணவியர்கள் பதிந்திடும் தங்களின் அலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும் என்பதால் , அலைபேசியை தவறாது கொண்டு வர வேண்டும்.
* இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவியர்க்கு தகவல் அளித்து கல்லூரிக்கு வரவழைத்து தேர்வு நடைபெற்றாலும் தேர்வு முடித்த பிறகு ( முற்பகல் அல்லது பிற்பகல் ) இந்த விவரங்களை விரைந்து உள்ளீடு செய்தல் வேண்டும்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இணைய வசதி உள்ள மாணவியர்கள் தாங்களாகவே தங்களது கைபேசி அல்லது கணினி வாயிலாக மேற்காண் இணைய முகவரியைப் பயன்படுத்தி தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
இதனை சம்மந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இத்திட்டத்தினை , தொழில்நுட்பக் கல்வி ஆணையர் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி கல்லூரி வாரியாக கண்காணித்து உடனுக்குடன் விவரங்கள் பதிவிடப்படுவதை உறுதி செய்து அனைத்து மாணவியர் விவரங்களும் 30.6.2022 – க்குள் பதிவிடப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் , ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணிக்குள் கல்லூரி வாரியாக பதிவிடப்பட்ட மாணவியரின் எண்ணிக்கை குறித்த அறிக்கையினை தவறாது அரசுக்கு அனுப்ப வேண்டும்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});