RTE Act அடிப்படையில் மத்திய மாநில பள்ளிகளில் பணி நியமனம் பெறும் ஆசிரியர்கள் கட்டாயம் TET தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற நிபந்தனை கடந்த 23/8/2010 முதல் அமலாக்கம் செய்யப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் இது சற்றே தாமதமாக அரசாணை எண் 181 மூலம் நடைமுறைப் படுத்தப்பட்டது.
இந்த சட்ட நடைமுறையில் ஆசிரியர்கள் பணி நிரப்புதல் தொடர்பாகவும், நிரந்தர பணியிடங்களில் பணி நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் என்ற பள்ளிக்கல்வி இயக்கக செயல்முறைகள் 16/11/2012 அன்று தான் வெளிவந்தது என்பதாலும், இந்த தேதிக்கு முந்தைய காலகட்டத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, பல்வேறு வழிகளில் தமிழக அரசிடமிருந்து TET லிருந்து விலக்கு வேண்டி கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில் கடந்த ஆட்சியாளர்கள் மறுப்பு தெரிவித்து வந்தனர். விலக்கு தருவதில் பல்வேறு பாகுபாடுகளும்,
குழப்பங்களும் இருந்து வந்தன. அதை தீர்க்கும் விதமாகவும், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களைப் பாதுகாக்கும் விதமாகவும், பத்தாண்டுகளுக்கு மேல் கல்வி கற்றல் கற்பித்தலில் உள்ளதையும் கருத்தில் கொண்டு தற்போதைய தமிழக அரசு விரைவில் அரசாணை வெளிவிடும் எனவும் பள்ளிக்கல்வி துறை ஆணையகம் வழியாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
நிரந்தரமாக பணியிடத்தில் பணி நியமனம் பெற்று இன்று வரை TET லிருந்து விலக்கு தொடர்பான தெளிவான அரசாணை இல்லாமல் தமிழக அரசிடமிருந்து ஒரு நல்ல விடியல் வரும் என காத்துக் கொண்டு இருப்பவர்கள்:
1) 23/8/2010 க்கு பிறகு (TRB / வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில்) நிரந்தர பணியிடங்களில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்
2) 23/8/2010 க்கு பிறகு அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறுபான்மை / சிறுபான்மையற்ற பள்ளிகளில் நிரந்தர பணியிடங்களில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்.
3) ஆசிரியர் அல்லாத அரசு பணியிடங்களில் பணி நியமனம் பெற்று, 23/08/2010 க்குப் பிறகு பதவி உயர்வு மூலமாக இடைநிலை (TET PAPER 1) / பட்டதாரி (TET PAPER 2) ஆசிரியர்களாக பணியில் தொடருபவர்கள்.
4) சத்துணவுத் துறையில் அரசு பணியிடங்களில் பணி நியமனம் பெற்று, 23/08/2010 க்குப் பிறகு பதவி
உயர்வு மூலமாக இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் தொடருபவர்கள்.
5) 23/8/2010 க்கு பிறகு அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறுபான்மை / சிறுபான்மையற்ற பள்ளிகளில் நிரந்தர பணியிடங்களில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் ஒரு சிலர் தற்போது நீதிமன்ற வழிகாட்டல் அடிப்படையில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக / தலைமை ஆசிரியர்களாக பணி புரிந்து வருபவர்கள்.
தற்போதைக்கு TET விலக்கு தொடர்பான பெரும்பாலான வழக்குகள் நிறைவுற்று இருப்பதால், இந்த நிரந்தரமாக பணியிடத்தில் சேர்ந்த ஆசிரியர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசிற்கு உண்டு. மேலும், பெரும்பாலான ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கு மேல் பணி புரிந்த அனுபவசாலிகள் என்பதாலும், 50 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என்பதாலும், மறைந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் மொழியப்பட்ட அரசாணைகளின்படி பணியில் சேர்ந்தவர்கள் என்பதாலும், ஏற்கனவே ஊதியம் பெற்று வருவதால் அரசிற்கு புதிய செலவினங்கள் ஏதுமில்லை என்பதாலும், TET க்கு நிகரான புத்தாக்கப் பயிற்சி ஒன்றைத் தந்து விரைவில் TET பாதிப்பிலிருந்து விடுபட வழிவகை செய்யப்படும் எனவும் கல்வித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
No comments:
Post a Comment