தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு முடிவுகளை .tnresults.nic.in, dge1.tn.nic.in மற்றும் dge2.tn.nic.in .. என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 20ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் , தனியார் மெட்ரி``` ```க் பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது. சுமார் 9 லட்சம் பேர் எழுதிய 45 லட்சம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள்களை திருத்தி, மதிப்பெண்களை தொகுத்து அவற்றை தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்த பின், தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.20ஆம் காலை 10 மணிக்கு .... இணையதளத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பிற்பகல் 12 மணிக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை .. tnresults.nic.in, dge1.tn.nic.in மற்றும் dge2.tn.nic.in. என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.
``` ```
No comments:
Post a Comment