10 ஆம் வகுப்பு தேர்வில் ஜஸ்ட் பாஸ்.ஆனால் இப்போது ஐஏஎஸ்...வைரலான மார்க் சீட் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, June 16, 2022

10 ஆம் வகுப்பு தேர்வில் ஜஸ்ட் பாஸ்.ஆனால் இப்போது ஐஏஎஸ்...வைரலான மார்க் சீட்

``` ```

கலெக்டர் துஷார் சுமேராவின் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சக ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவனிஷ் சரண் பகிர்ந்திருக்கிறார். அதில், “பாரூஜ் கலெக்டர் துஷார் சுமேரா தேர்ச்சி பெறுகிற அளவுக்கு மட்டும் தான் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் பெற்றுள்ளார். 100-க்கு ஆங்கில பாடத்தில் 35-ம் கணிதத்தில் 36 மட்டுமே பெற்றிருக்கிறார். ஊரில் மட்டுமல்ல பள்ளியிலும்கூட அவரால் எதையும் சாதிக்க முடியாது என சொல்லியிருக்கிறார்கள்” அதனை மீறி தனது திறமையை நிரூபித்து இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக உயர்ந்திருக்கும் துஷாரின் சாதனை உயர்வானது. யார் இந்த துஷார் ! துஷார் சுமேரா அஹமதாபாத்தைச் சேர்ந்தவர். 2012 சிவில் தேர்வுகளில் வெற்றி பெற்றார். அரசு பள்ளியில் தான் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார்.``` ``` தற்போது பாரூஜ் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றுகிறார். UPSC தேர்வுகளுக்கு முன்பு அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக 2004-2007 வரை பணியாற்றியுள்ளார். 14 வருடங்களுக்கு பிறகு, தான் பணியாற்றிய பள்ளிக்கு சென்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். வைரல் பதிவு அவரது மார்க் சீட்டை 2009 பேட்ச் அதிகாரி சரண் பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதற்கு நன்றி தெரிவித்துள்ளார் துஷார். மதிப்பெண்கள் வாழ்வை தீர்மானிப்பதில்லை என்பதற்கு இது மற்றொமொரு உதாரணம். இந்தப் பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் பாஸிட்டிவாக கமென்ட் செய்து வருகிறார்கள்.``` ```

No comments:

Post a Comment