திருவள்ளூரில் 10-ஆம் வகுப்பு பாடப்பிரிவில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த அன்பில் மகேஷ், 10ஆம் வகுப்பு பாடத்தை கூர்ந்து கவனித்தார்.கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் மாநில பாடப்பிரிவு திட்டத்தின் கீழ் செயல்படக் கூடிய பள்ளிகள் இன்று வகுப்புகளை தொடங்கியுள்ளன. கொரோனா காலத்திற்கு பிறகு முறையாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.இதனால் மாணவர்கள் யாரும் விடுப்பு எடுக்காமல் வர வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் அமல்படுத்த முடிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம்
அதன்படி அந்த திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்க முதல்வர் ஸ்டாலின், அந்த மாவட்டத்தில் உள்ள வடகரை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 10ஆம் வகுப்புக்கு சென்ற போது ஆசிரியை ஒருவர் தமிழ் பாடத்தை எடுத்துக் கொண்டிருந்தார்.
10ஆம் வகுப்பு
என்ன கிளாஸ் என மாணவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் என கேட்டார். அதற்கு அந்த மாணவர்கள் 10ஆம் வகுப்பு என்றனர். உடனே முதல்வர் கடைசியிலிருந்து 3ஆவது பெஞ்சில் போய் அமர்ந்தார். ஆசிரியையை பார்த்து "அம்மா நீங்க நடத்துங்கம்மா பாடம்" என்றார். உடனே ஆசிரியை தமிழ் இலக்கணத்தை நடத்தினார்.
முதல்வரின் இருக்கை
முதல்வரின் இருக்கைக்கு பின்னால் உள்ள பெஞ்சில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமர்ந்திருந்தார். ஒரு மொழியை தவறு இல்லாமல் பேசுவதற்கும் எழுதுவதற்கும் இலக்கணம் பயன்படுகிறது. மொழி என்றால் என்ன, ஒருவரது கருத்துகளை நாம் அறிந்து கொள்வதற்கும் நமது கருத்துகளை பிறர் அறிந்து கொள்வதற்கும்தான் மொழி பயன்படுத்தப்படுகிறது என ஆசிரியர் கூறினார்.
கைகளை கட்டிய அன்பில்
அப்போது முதல்வர் பக்கத்திலிருந்த மாணவனின் நோட்டுப்புத்தகத்தை பார்வையிட்டார். கடைசி பெஞ்சில் அமர்ந்த அன்பில் மகேஷ் மாணவர்களுடன் சிரித்து உரையாடினார். மேலும் இரு கைகளையும் கட்டிக் கொண்டு அன்பில் மகேஷ் தமிழ் பாடத்தை கவனித்தார். அன்பில் மகேஷ், டிஆர்பி ராஜா, உதயநிதி ஆகிய மூவரும் நண்பர்கள். முதலில் அன்பிலுக்கு அமைச்சர் பதவி கொடுத்த போது டிஆர்பி ராஜா தனது ட்வீட்டில் , கடைசி பெஞ்சிலிருந்து முதல் பெஞ்சிற்கு போகும் மாப்பிள்ளைக்கு வாழ்த்துகள் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment