பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்.. பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்.. எந்த மாவட்டம் கடைசி தெரியுமா - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, June 27, 2022

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்.. பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்.. எந்த மாவட்டம் கடைசி தெரியுமா

தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில், இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடைபெற்றது. 

+2 மாணவர்களுக்கு மே 5 முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில், +1 மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31 வரை நடைபெற்றது.பிளஸ் 1 பொதுத்தேர்வுதமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் +1 பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் 8.3 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதைத் தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 


10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி வெளியான நிலையில், இன்று +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.தேர்ச்சி விகிதம்மொத்தம் 8.3 லட்சம் மாணவர்கள் தேர்வுக்குப் பதிவு செய்து இருந்த நிலையில், அவர்களில் 41,376 பேர் தேர்வு எழுதவில்லை என்று தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு +1 தேர்ச்சி விகிதம் 90.07%ஆக உள்ளது. வழக்கம் போல மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகமாக உள்ளது. மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.99% ஆகவும், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 84.6% ஆகவும் உள்ளது.


முதல் இடம் கடைசி இடம்


மாவட்ட வாரியாக பார்க்கும் போது பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. பெரம்பலூரில் தேர்ச்சி விகிதம் 95.56%ஆக உள்ளது. அதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் 95.44 சதவிகித தேர்ச்சி உடன் 2ஆம் இடத்திலும், மதுரை மாவட்டம் 95.25 சதவிகித தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் 80.02% தேர்ச்சி உடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.தேர்வு முடிவுகள்அதேபோல மாநிலத்தில் இருக்கும் 10 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 100%ஆக உள்ளது. இன்று காலை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. . ஆன்லைன்  மூலம் மாணவர்கள் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மாணவ, மாணவிகள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அதேபோல மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.

No comments:

Post a Comment