TNPSC - மைனஸ் மதிப்பெண் முறை குரூப் - 2 தேர்வில் உண்டு. - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, May 12, 2022

TNPSC - மைனஸ் மதிப்பெண் முறை குரூப் - 2 தேர்வில் உண்டு.

 குரூப் - 2' தேர்வில், 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு துறைகளில், குரூப் - 2, 2ஏ பணிகளில், 5,529 இடங்களை நிரப்ப, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வரும் 21ல் முதல் நிலை தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. 

இது தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பு:

* தேர்வர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய, பிரத்யேக விடைத்தாளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே, விடைத்தாள் பெற்றதும், அதில் உள்ள தங்களின் விபரங்களை சரிபார்த்த பின்னரே பயன்படுத்த வேண்டும். தவறாக இருந்தால், பயன்படுத்தும் முன் மாற்றிக் கொள்ள வேண்டும்

* தேர்வர்கள் அவர்களுக்கான விடைத்தாளுக்கு பதிலாக, வேறு விடைத்தாள் பெற்று, அதில் தங்களின் பதிவு எண்ணை தவறாக எழுதியிருந்தால், தேர்வரின் மொத்த மதிப்பெண்ணில், 2 மதிப்பெண் கழிக்கப் படும் 

* மொத்த கேள்விகளுக்குமான விடைக்குறிப்பை, 'ஷேடிங்' செய்வதில் சரியான முறையை பின்பற்றாவிட்டால், 2 மதிப்பெண் கழிக்கப்படும் 

* வினா தொகுப்பு புத்தகத்தின் எண்ணை சரியாக குறிப்பிடாமலும், விடைத்தாளில் அதற்கான இடத்தில் சரியாக எழுதாமலும் இருந்தால், 5 மதிப்பெண் கழிக்கப்படும் 

* ரேகை வைக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் தவிர, மற்றவர்கள் தேவைப்படும் இடத்தில், விரல் ரேகை வைக்க வேண்டும். ரேகை வைக்காவிட்டால், 2 மதிப்பெண் கழிக்கப்படும் 

* எந்த கேள்விக்காவது விடைக் குறிப்பை தேர்வு செய்யாமல் காலியாக விட்டால், 2 மதிப்பெண் கழிக்கப்படும். எனவே, தேர்வர்கள் மிகவும் கவனமாக விடைத்தாளை கையாள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment