புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, May 15, 2022

புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

சென்னை, சென்னை தி.நகரில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- புதிய கல்வி கொள்கை மாநில உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது. மாநில கல்வி கொள்கையை உருவாக்க முதல்வர் குழு நியமித்துள்ளார். புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. புதிய கல்விக் கொள்கையால் இடைநிற்றல் அதிகரிக்கும் என்பதால் அதை எதிர்க்கிறோம். 3-வது மொழியாக இந்தி விருப்ப மொழியாக இருக்கலாமே தவிர, கட்டாயமாக இருக்கக்கூடாது. இந்தி திணிக்கப்படவில்லை, விருப்ப மொழிதான் என்பதை மத்திய அரசிடம் கவர்னர் கொண்டு செல்வார் என் நம்புகிறோம். தனியார் பயிற்சி மையங்களில் வளர்ச்சியை நுழைவுத்தேர்வுகள் ஊக்குவிக்கின்றன. மொழிவாரியாக வேறுபட்டாலும், திராவிடர் எனபதில் ஒன்றுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment