பொதுத்தேர்வின் தேர்வறையில் மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் பெயரில் வெளியான சுற்றறிக்கை போலியானது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். பொது சுகாதாரத்துறை இயக்குனர் நேற்று எவ்விதமான அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகாலமாக பொதுத்தேர்வுகள் நடைபெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் இன்றைய தினம் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன.தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர், பிளஸ் டூ பொதுத் தேர்வுகளை எழுதுகின்றனர். இதற்காக தமிழகம் முழுவதும் 3,119 தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
மாஸ்க் அணிய அட்வைஸ்
மாணவர்களுக்கு முக கவசம்இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே ஆறடி இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும், கிருமிநாசினி கொண்டு தேர்வறைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் அவசியம், தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளுதல் கட்டாயம், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தேர்வு மையங்களில் முழுமையாக கடை பிடிக்க வேண்டும் என்று நேற்றிரவு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் பெயரில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அறிக்கை ஒன்று வெளியானது.
முக கவசம் கட்டாயமல்ல
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுத்தேர்வின் தேர்வறையில் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் பெயரில் வெளியான சுற்றறிக்கை போலியானது என்றார். பொது சுகாதாரத்துறை இயக்குனர் நேற்று எவ்விதமான அறிக்கையும் வெளியிடவில்லை. மாணவர்கள் எவ்வித பதற்றமும் அடையாமல் தேர்வை எழுதலாம் என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
26,76,675 மாணவர்கள்
தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை மொத்தமாக 26 லட்சத்து 76 ஆயிரத்து 675 பேர் எழுதுகிறார்கள். தேர்வு எழுதும் மாணவர்கள், அருகில் உள்ள சக மாணவரின் விடைத்தாளை பார்த்து எழுதினாலோ, அல்லது பிறரின் உதவியோடு தேர்வு எழுதினாலோ, அந்த மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், சூழ்நிலை மற்றும் சான்றுகளின் அடிப்படையில் அடுத்த இரு பருவத் தேர்வுகளுக்கும் அதிகமான பருவங்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்" என்றும், எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
1000 பறக்கும் படைகள் அமைப்பு
அதே போல், "தேர்வு எழுத ஆள்மாறாட்டம் செய்தால், பருவத் தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், தேர்வு எழுத நிரந்தர தடையும் விதிக்கப்படும்" என்றும், அதிரடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 1,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களில் செல்போன் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷூ, பெல்ட் அணிந்து வரவும் அதிரடியாக அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது..
No comments:
Post a Comment