அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டுமல்ல... இந்த பொருட்கள் வாங்கினாலும் செல்வம் பெருகும் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, May 2, 2022

அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டுமல்ல... இந்த பொருட்கள் வாங்கினாலும் செல்வம் பெருகும்


 அட்சயதிருதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். தங்கம் மட்டுமல்ல நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கினாலும் செல்வம் பெருகும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். 


சகல யோகங்களுக்கும் ஆதாரமாக அன்னை லட்சுமி விளங்குகின்றாள். அட்சயதிருதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர்.அட்சய திருதியை நாளில் என்ன வாங்கலாம்அட்சய திருதியை நாளில் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம். அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம். எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிருதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே.அஷ்ட லட்சுமிகளின் ஆசிவட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள்.அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். இந்நாளில் அஷ்ட லட்சுமிகளின் ஆசிகளை பெற வீட்டில் அவரவர் வசதிக்கேற்ப குபேரபூஜை செய்தால் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.பச்சரிசி மஞ்சள்அட்சய திருதியை நாளில் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு பூஜையறையில் கோலமிட்டு, அதன்மேல் ஒரு மனைப்பலகையை போட்டு ஒரு வாழை இலையை போடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரிசியை பரப்பி அதன் மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து கலசமாக்கி, கலசத்தின் அருகே ஒரு படி ஆளாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வக்க வேண்டும். கலசத்திற்கு பொட்டு, பூ வைத்து அலங்கரிக்க வேண்டும். 


லட்சுமி குபேரர் படம் இருந்தால் அதனையும் அலங்கரித்து பூஜையறையில் வைக்க வேண்டும். குத்துவிளக்கேற்றி , மஞ்சலில் பிள்ளையார் பிடித்து வாழை இலையின் வலப்பக்கமாக வைக்க வேண்டும். தொடர்ந்து, நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வைக்க வேண்டும். முதலில் விநாயகரை மனதார வேண்டிக்கொண்டு லட்சுமி தேவியை கலசத்தில் எழுந்தருளுமாறு பிரார்த்தனை செய்ய வேண்டும். நமக்கு தெரிந்த விஷ்ணுலட்சுமி, சிவன்பார்வதி, குபேரர் துதிகளை சொல்வதும் கேட்பதும் படிப்பதும் சிறந்தது.பால் பாயாசம்பூஜையின் முடிவில் பாயாசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது. அன்று மாலை சிவன் அல்லது பெருமாள் கோவில் செல்லலாம். அதன் பின் வீட்டுக்கு சென்று தூப தீப ஆராதனை கலசத்துக்கு காட்டி கலசத்தினை வடப்பக்கமாக நகர்த்தி வையுங்கள். கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்து விட்டதாக அர்த்தம். பயன்படுத்திய அரிசி, கலச தேங்காய் போன்ற பொருட்களை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.குல தெய்வ வழிபாடுபூஜையறையில் குலதெய்வ இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். இத்துடன் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.


கல்விக்கு உதவி செய்யலாம்அட்சய திருதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தானதர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும். பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும். தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது.தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.

No comments:

Post a Comment