மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை - இன்று முதல்வருடன் ஆலோசனை! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, May 3, 2022

மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை - இன்று முதல்வருடன் ஆலோசனை!

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், பகலில் மக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் இளநீர், தர்பூசணி பழக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. இதனால் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வெயிலின் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறஉள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆலோசனைக்கு பிறகு கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை விடுவது குறித்து நாளை 04.05.2022 முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தகவல்

No comments:

Post a Comment