முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஒராண்டு நிறைவடைந்து இன்று இரண்டாம் ஆண்டில் பயணிகிறது. சட்டசபையில் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் மக்கள் மனம் குளிரும் வகையில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக அரியணை ஏறினார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறி முதலமைச்சராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.ஓராண்டு நிறைவு கொண்டாட்டமாக, தலைமைச் செயலகம், சட்டசபை வளாகம், அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
முதல்வர் இன்று தனது இல்லத்திலிருந்து புறப்பட்டு, தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அங்கிருந்து சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைமைச் செயலகம் சென்றார்.
ஓராண்டு கொண்டாட்டம்
முதல்வர் மு.க ஸ்டாலின் இன்றைய தினம் தனது ஓராண்டு கால அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு பேசினார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், இல்லத் தேடி கல்வித்திட்டம், 48 மணி நேர திட்டம் உள்ளிட்ட பல சாதனைகளைப் பட்டியலிட்டார் ஸ்டாலின்.சர்ப்ரைஸ் தருவாரா?எதிர்க்கட்சிகளி்ன் இந்த விமர்சனத்துக்கு பதிலடி தரும் விதத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, டீசல் விலை குறைப்பு ஆகிய இரண்டு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்புகள் எதுவும் இன்றைய தினம் வெளியாகவில்லை.
மனம் குளிரும் அறிவிப்புகள்
முதல்வர் மு.க ஸ்டாலின் இன்றைய தினம் ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அரசுப்பள்ளிகளில் தொடக்கப்பள்ளி பயிலும் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று கூறினார். 234 தொகுதிகளிலும் உங்கள் தொகுதிகளில் முதலமைச்சர் திட்டம் தொடங்கப்பட்டு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று கூறினார்
No comments:
Post a Comment