பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழப்பு...! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, May 13, 2022

பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழப்பு...!


சிவகங்கை, சிவகங்கை சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் ராஜ்குர்மா (வயது 59) .இவரது மனைவி லதா ( 53). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். லதா சிவகங்கை பகுதியில் உள்ள நகராட்சி ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருந்தார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். சிவகங்கை பஸ் நிலையம் அருகில் வரும்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று லதா மீது மோதியது. இந்த விபத்தில் தலைமை ஆசிரியர் லதா சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment