பள்ளிகள் திறப்பு எப்போது.. மாணவர்களுக்கு முக்கிய தகவல்.. தமிழக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, May 24, 2022

பள்ளிகள் திறப்பு எப்போது.. மாணவர்களுக்கு முக்கிய தகவல்.. தமிழக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

  11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி எப்போது மேற்கொள்ளப்படும், மீண்டும் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது..தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன....தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாகவே, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவில்லை. அதேபோல, கடந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வும் நடைபெறவில்லை.தற்போது தொற்று பரவல் குறைந்ததையடுத்து, நடப்பாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்.. அதன்படியே, தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வுகளும், 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் நடந்து வருகிறது... 1ம்‌ வகுப்பு முதல்‌ 9ஆம்‌ வகுப்பு வரை மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு மே 13ம் தேதியுடன்‌ முடிவடைந்தது.. பிறகு, மே 14 முதல்‌ கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது.தேர்வு பணிகள்இந்நிலையில், பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜுன் 10 முதல் 17ம் தேதி வரை துவங்கி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. ஆதேபோல, ஜுன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகி இருந்தது.. ஆனால், 10, 11, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்பதால், ஜுன் 10 முதல் 12ம் தேதி வரை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது..விடுமுறைஇதன்காரணமாக, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது தாமதமாகலாம், அதாவது ஜுன் 20 அல்லது 27ம் தேதி இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மே மாதம் 14ம் தேதி முதல் விடுமுறையும், தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் 20ம் தேதி முதல் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு தாமதமாகலாம் என்கிறார்கள்..வெயில்அதன்படி 1 முதல் 10ம் வகுப்புகளை ஜுன் 13ம் தேதியில் இருந்தும், 11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு ஜுன் 20 அல்லது 27ம் தேதியும் திறக்கலாம் என்றும் கூறப்படுகிறது.. . இந்த முறை கடுமையான வெய்யில் காரணமாக கோடைவிடுமுறையை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள், பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.அன்பில் மகேஷ்இந்நிலையில், கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளாராம்.. மேலும், வரும் கல்வியாண்டுக்கான தேர்வு தேதி அறிவிப்புகளையும் நாளை காலை அவர் வெளியிடுவார் என தெரிகிறது. இது பெற்றோர் - மாணவர் இடையே ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகிறது.பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது

No comments:

Post a Comment