யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்.. உ..பி.யை சேர்ந்த ஸ்ருதி சர்மா முதலிடம்!.. டாப் 4 இல் பெண்கள் சாதனை! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, May 30, 2022

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்.. உ..பி.யை சேர்ந்த ஸ்ருதி சர்மா முதலிடம்!.. டாப் 4 இல் பெண்கள் சாதனை!

 


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேசிய அளவில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஸ்ருதி சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், இந்திய வனத்துறை சேவை உள்ளிட்ட நிறைய உயர் பதவிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் எழுத்துத் தேர்வும், கடந்த ஏப்ரல்- மே மாதங்களில் நேர்காணலும் நடைபெற்றது.இந்த நிலையில் இன்றைய தினம் யுபிஎஸ்சி இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகின. 

தேர்வு எழுதியவர்களில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஸ்ருதி சர்மா முதலிடம் பிடித்துள்ளார். இவர் புனித ஸ்டீபன் கல்லூரி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்தவர். ஜாமியா மில்லியா இஸ்லாமியா பயிற்சி மையத்தில் யுபிஎஸ்சி தேர்வுககு தயாராகி வந்தார். இரண்டாவது இடத்தை அஹ்கிதா அகர்வாலும் மூன்றாவது இடத்தை காமினி சிங்களாவும் பிடித்துள்ளனர். அதாவது இந்த தேர்வில் முதல் 4 இடங்களை பிடித்தவர்கள் பெண்களே. 

மொத்தம் தேர்ச்சி பெற்ற 685 பேரில் 244 பேர் பொது பிரிவினரை தேர்ந்தவர்கள். 73 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், 203 பேர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், 105 பேர் எஸ்சி மற்றும் 60 பேர் எஸ்டி பிரிவினர் ஆவார். இந்த பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான நேர்காணல் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடந்தது. 4ஆவது ஐஸ்வர்யா வர்மா பிடித்துள்ளார். 5ஆவது இடத்தை உத்கர்ஷ் திவிவேதி பிடித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த ஸ்வாதி ஸ்ரீ என்பவர் 42 ஆவது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.தேர்வு முடிவுகள் வெளியான 15 நாட்களுக்குள்  யுபிஎஸ்சி இணையதளத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள் வெளியிடப்படும்.

 தேர்வு முடிவுகள் தொடர்பாக ஏதேனும் தெளிவுபெற வேண்டுமானால் 23385271/23381125 /23098543 ஆகிய தொலைபேசி எண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.மத்திய அரசு பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதமர மோடி வாழதது தெரிவித்துளளார். இந்தியாவின் வளர்ச்சிக்கான முக்கிய தருணத்தில் இளைஞர்கள் நிர்வாகத் துறையில் கால் பதிப்பதற்கு எனது வாழ்த்துகள் என மோடி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment