(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற டிஎன்பிஎஸ் குருப் 2 தேர்வு குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 2, 2ஏ தேர்வுகள் நேற்று நடைபெற்றது. இதில் குரூப் 2 பிரிவில் 116 காலியிடங்களும், குரூப் 2ஏ பிரிவில் 5,413 காலியிடங்களுக்கும் தேர்வுகள் நடைபெற்றது.5 ஆயிரத்திற்கும் அதிகமான இந்த பணியிடங்குக்கு சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்தனர். ‛இந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சார்-பதிவாளர் உள்ளிட்ட நேர்முகத் தேர்வு அடங்கிய 116 காலிப் பணியிடங்களுக்கும், நகராட்சி ஆணையர், உதவி அலுவலர் உட்பட 5,413 நேர்முகத் தேர்வு இல்லாத காலி பணியிடங்களுக்கும் முதல்நிலைத் தேர்வு நேற்றைய தினம் நடைபெற்றது.9.94 லட்சம் பேர்தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் 11.78 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதத் தகுதி பெற்று இருந்தனர். நேற்று காலை சரியாக 9.30 மணிக்குத் தொடங்கிய இந்தத் தேர்வு மதியம் 12.30 மணிக்கு நிறைவடைந்தது. தேர்வுக்குப் பதிவு செய்தவர்களில் சுமார் 1.80 லட்சம் பேர் இந்தத் தேர்வுக்கு வரவில்லை. தமிழகம் முழுவதும் 9.94 லட்சம் பேர் இந்தத் தேர்வை நேற்று எழுதினர்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதில் குரூப் 2, குரூப் 2 ஏ கேள்வித்தாள்களில் தவறான கேள்விகள் எதுவும் இடம் பெற வில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல மொழிபெயர்ப்பிலும் தவறு இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
