கருணை அடிப்படையில் அரசு வேலை!\" 22 ஆண்டுகளுக்கு நீடித்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி! ஐகோர்ட் தீர்ப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, May 7, 2022

கருணை அடிப்படையில் அரசு வேலை!\" 22 ஆண்டுகளுக்கு நீடித்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி! ஐகோர்ட் தீர்ப்பு


கருணை அடிப்படையில் வேலை கோரி பெண் ஒருவர் விண்ணப்பித்த விவகாரத்தில் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.கடலூர் மாவட்டம் கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய தண்டபாணி. இவர் கடந்த மார்ச் 2000ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.அவரது மூன்றாவது மகளான வி சுந்தரி, மற்ற சட்டப்பூர்வமா வாரிசுகளிடமிருந்து (அவரது தாய் மற்றும் மூன்று சகோதரிகள்) அனுமதி பெற்ற பிறகு, கடந்த டிசம்பர் 2001இல் கருணை அடிப்படையில் அரசு வேலை கோரி விண்ணப்பித்து இருந்தார்.அவரது விண்ணப்பம் குறித்து, சுமார் 14 ஆண்டுகளாக எவ்வித முடிவையும் எடுக்காமல் இருந்த அதிகாரிகள், கடந்த 2015 ஆகஸ்டில் இந்த விண்ணப்பத்தை நிராகரித்தனர். இதை எதிர்த்து சுந்தரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் அரசு சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர், மனுதாரரின் மற்ற சகோதரிகள் மூவரும் திருமணமானவர்கள் என்றும் அவர்களது கணவர்கள் அரசுத் துறைகளில் பணிபுரிபவர்கள் என்றும் தெரிவித்தார்,மேலும், மனுதாரருக்கும் கடந்த 2004இல் திருமணம் நடந்தது என்றும் அவரது கணவரும் அரசுப் பணியில் உள்ளார் என்றும் தெரிவித்தார். இதன் காரணமாக அவரது குடும்பம் மோசமான நிலையில் இருப்பதாகக் கருத முடியாது என்றும் இதனால் இந்த விவகாரத்தில் கருணை அடிப்படையில் வேலை என்பது பொருந்தாது என்று வாதிட்டார். இருப்பினும், அரசு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுதாரரின் தந்தை மார்ச் 2000இல் இறந்துவிட்டதாகவும், மனுதாரர் சுந்தரி குறிப்பிட்ட காலத்திற்குள் கருணை அடிப்படையில் அரசு வேலை கோரி விண்ணப்பித்ததாகவும் தெரிவித்தார். அந்த நேரத்தில் அவருக்குத் திருமணம் ஆகவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, மனுதாரரின் திருமணத்தை வாதமாக வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். மனுதாரரின் கணவர் கடைசி கிரேட்டில், அதுவும் தற்காலிக ஊழியராகவே அரசு வேலையில் உள்ளார் என்பதால் இதை வைத்துக் கொண்டு கருணை அடிப்படையில் வேலை வழங்க முடியாது என்று கூறக் கூடாது என்றார்.மேலும், மனுதாரரின் சகோதரிகளின் கணவர்கள் அரசுத் துறைகளில் உள்ளனர் என்பதைக் குறிப்பிடுவதும் நியாயமானதாக இல்லை என்றார். எனவே, மனுதாரர் ஆதரவற்ற நிலையில் உள்ளதாகக் கருதி, கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 2015இல் சுந்தரியின் மனு நிராகரிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் மனுதாரருக்குத் தகுந்த பணி வழங்கப் பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment