இன்றைய ராசி பலன்கள் - ஞாயிற்றுக்கிழமை மே 22 2022 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, May 21, 2022

இன்றைய ராசி பலன்கள் - ஞாயிற்றுக்கிழமை மே 22 2022

 


சுபகிருது வருடம் வைகாசி மாதம் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 22.5.2022. இன்று மாலை 06.28 மணி வரை சப்தமி திதி. பின்னர் அஷ்டமி. இன்று அதிகாலை 04.28 மணி வரை திருவோணம். பின்னர் அவிட்டம். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்


நிமிர்ந்து நின்று எதையும் சமாளிப்பீர்கள். நினைத்த காரியத்தில் நிதானமாக வேலை செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் துறையை மேம்படுத்த கடுமையாக உழைப்பீர்கள். திட்டமிட்டு வெளியூர்ப் பயணங்கள் சென்று வியாபாரத்திற்குத் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். நிலையான வருமானத்தை ஏற்படுத்த, வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்வீர்கள்.


ரிஷபம்


கட்டுமானத்துறையில் புதிய முறைகளைக் கையாளுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் நல்ல லாபத்தை ஈட்டித் தரும். ஆன்லைன் வர்த்தகங்கள் அமோகமாக முன்னேற்றம் காணும். போட்டி பந்தயங்கள் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். அரசுப்பணியாளர்கள் சிறப்பான நிலையை அடைவார்கள். வங்கிக்கடன் தடையில்லாமல் வந்து சேரும்.


மிதுனம்


தந்தையாருக்கு மருத்துவச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் வரும். பாதிப்படைந்த வீட்டை பழுது பார்த்து புதுப்பிக்கும் வேலை நடக்கும். வேலை காரணமாக பிரிந்து சென்ற நண்பர்கள் வீட்டிற்கு வருவார்கள். திருமண வயதில் உள்ளவர்களுக்கு வரன் அமையும். குறு சிறு வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். உறவினர்களின் ஒத்தாசை உங்களுக்கு உண்டு.


கடகம்


முணுக்கென்று கோபப்படுவதை மூட்டைகட்டி வையுங்கள். நல்ல உறவுகள் நசிந்து போகும். தொழிலுக்கான பயணங்கள் அதிக பயன் தராது. பங்குப் பரிவர்த்தனை சரிவில் நிற்கும். நிலம் வாங்கி விற்பது தாமதமாகும். பிள்ளைகளால் சின்னச் சின்னத் தொல்லைகள் உண்டாகும். கணவன்-மனைவிக்கிடையே விரிசல் உண்டாகும். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.


சிம்மம்


தொழில் துறைகள் சிறப்பாக இருந்தாலும் மனதில் இனந்தெரியாத கவலை அழுத்தும். எதிர்காலம் பற்றிய பயம் இருக்கும். பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்க முயற்சி செய்வீர்கள். வேலை இடத்தில் இருந்த சிக்கலைத் தீர்ப்பீர்கள். அரசாங்க வேலை பார்ப்பவர்கள் அதிகம் அலைய வேண்டிய நிலை உருவாகும். பழைய கடன்களை அடைக்கப் பாடுபடுவீர்கள்.


கன்னி


வியாபாரத்தை விரிவுபடுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் முட்டுக்கட்டை ஏற்படும். ஆன்லைன் வர்த்தகம் அதிக லாபம் தராது. நிலம் வாங்கி விற்கும் தொழில் சுணக்கமாகவே நடக்கும். அடுத்தவரின் பேச்சைக் கேட்டு அவசரப்பட்டு காரியத்தில் இறங்காதீர்கள். நியாயமான கோபமாக இருந்தாலும் குடும்ப நிம்மதிக்கு பங்கம் வரும். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்.


துலாம்


உயர்கல்விக்காக பிள்ளைகளை வெளிநாடு அனுப்ப முயற்சி எடுப்பீர்கள். உறவுகளில் இருந்த சங்கடங்கள் விலகி நெருக்கம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை நிலவும். சுப நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்வீர்கள். வேலை நிமித்தமாக வெளியூரில் தங்க வேண்டிய நிலை ஏற்படும். தாய்மாமன் வகையில் தக்க சமயத்தில் உதவி கிடைக்கும்.


விருச்சிகம்


ஏக்கத்தோடு இருக்கும் உங்களின் நோக்கத்தை நிறைவேற்ற நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தோப்புக் குத்தகை மூலமாக கணிசமான வருமானம் பெறுவீர்கள். வீட்டு வாடகை சேமிப்பாக மாறும். சிலர் புதிய வீடு மாறுவார்கள். பொன் நகைகள் வாங்கி இல்லத்தரசிகளின் புன்னகையைப் பரிசாகப் பெறுவீர்கள். தாயாரின் பூர்வீகச் சொத்து உங்களுக்கு வந்து சேரும்.


தனுசு


பங்குச்சந்தையில் பக்குவமாக முதலீடு செய்யுங்கள். உங்கள் வேலையை காலி செய்ய உடனிருப்பவர்களே குழி பறிப்பார்கள். தொழில் சம்பந்தப்பட்ட அரசாங்க வேலைகள் தாமதமாக நடக்கும். சகோதர சகோதரிகளால் பிரச்சனை உண்டாகும். அவற்றைத் தீர்க்க பாடுபடுவீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகம் செலவு செய்வீர்கள். பழைய கடனை அடைப்பீர்கள்.


மகரம்


எடுத்த காரியங்கள் எந்த வகையிலாவது ஈடேறும். புத்திசாலித்தனமாக வேலைசெய்து உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். மற்றவர்கள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். மருத்துவர்கள் மகத்தான பெருமை அடைவார்கள். கட்டிடத் தொழில் கனஜோராக நடக்கும். வியாபாரத்தில் நல்ல ஏற்றம் காண்பீர்கள். வெளியூர்ப் பயணம் சிறப்பான வெற்றியைத் தரும்.


கும்பம்


"லொட லொட" என்று பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். பத்திரத்தில் எழுதிக்கொண்டு பணப் பரிவர்த்தனை செய்யுங்கள். போட்டி பந்தயங்களில் இருந்து விலகி இருங்கள். ஆன்லைன் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காதீர்கள். மற்றவர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்காதீர்கள். அரசு ஊழியர்கள் கவனமாக வேலை செய்யுங்கள். விசனம் வித்தைக்குச் சத்துரு.


மீனம்


உயரதிகாரிகளின் கோபம் உங்களைக் காயப்படுத்தலாம். அதற்காக அவசரப்பட்டு வேலையை விட்டு விடாதீர்கள். குடும்பச் சுமையைத் தீர்க்க பணிச்சுமையை ஏற்றுக்கொள்ளுங்கள். வெளியூர்ப் பயணங்களின் போது கைப்பொருளைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். சாலையில் நிறுத்தும் வாகனத்தை நன்றாக பூட்டி விட்டுச் செல்லுங்கள். டென்ஷன் ஆகாதீர்கள்.  

No comments:

Post a Comment