ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுனம் ராசிகளில் பயணம் செய்கிறார். ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை மாதம் இந்த மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் அதிர்ஷ்டம் வரும், சிலருக்கு யோகம் ஏற்படும். ஜூன் மாதம் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படியிருக்கும் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஜூன் தொடக்கத்தில் மேஷத்தில் ராகு, சுக்கிரன், புதன், ரிஷபத்தில் சூரியன், துலாம் ராசியில் கேது, மகரத்தில் சந்திரன், மீன ராசியில் குரு, செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
ஜூன் 3ம் தேதி புதன் வக்ரம் முடிவுக்கு வருகிறது. ஜூன் 5ம் தேதி கும்ப ராசியிலேயே சனி வக்ர பெயர்ச்சி, ஜூன் 15ம் தேதி சூரியன் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
ஜூன் 18ல் ரிஷபத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சி, ஜூன் 27ல் செவ்வாய் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன யோகங்கள் நடைபெறப்போகிறது என்று பார்க்கலாம்.
ரிஷபம்சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு காரிய வெற்றிகள் நிறைந்த மாதம். உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் ராகு உடன் 12ஆம் வீட்டில் இணைந்துள்ளார். கவலைகள் கஷ்டங்கள் நீங்கப்போகிறது. ராசியில் உள்ள சூரியன் இரண்டாம் வீட்டிற்கு செல்லப்போகிறார். லாப ராசியில் குரு மங்கள யோகம் கை கூடி வந்துள்ளது. மாத பிற்பகுதியில் சுக்கிரன் உங்கள் ராசிக்கு வந்து ஆட்சி பெற்று பயணம் செய்யப்போகிறார்.கல்யாண யோகம்ராசிநாதன் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போவதால் முகத்தில் பொலிவு அதிகரிக்கும். கல்யாண களை வந்து விட்டது. திருமண சுப காரியம் கை கூடி வரும். குடும்பத்தில் புத்திரபாக்கியம் கை கூடி வரும்.
தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். கல்யாண யோகம் தான் வந்து விட்டதோ என்று பாடுவீர்கள். கஷ்டங்கள் நீங்கி விடிவுகாலம் பறக்கப்போகிறது.பண வருமானம் வரும்திடீர் செலவுகள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். திடீர் வருமானங்கள் வரும். குடும்ப வாழ்க்கையில் குதூகலம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் தேடி வரும். தகவல் தொடர்பு சிறப்படையும். எண்ணங்கள் தெளிவடையும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். தாய் வழி உறவுகளார் நன்மை ஏற்படும். எதிரிகள் தொல்லை நீங்கும்.ஆரோக்கியத்தில் அக்கறைதொழில் வியாபாரத்தில் தெளிவான முடிவெடுப்பீர்கள். கூட்டாளிகளிடம் பேசும் போது நிதானமாக பேசுங்கள். பண விவகாரங்களில் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். தொட்டது துலங்கும் காலமாகும். வேலையிலும் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுவது அவசியம். மனைவி வழி உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வெளியில் ஹோட்டல்களில் சாப்பிடும் போது கவனம் அவசியம். நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதமாக ஜூன் மாதம் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment