ஜூன் மாத ராசி பலன் 2022.. விபரீத ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர் யார்? - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, May 27, 2022

ஜூன் மாத ராசி பலன் 2022.. விபரீத ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர் யார்?

 சென்னை: ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுனம் ராசிகளில் பயணம் செய்கிறார். ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை மாதம் இந்த மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் அதிர்ஷ்டம் வரும், சிலருக்கு யோகம் ஏற்படும். ஜூன் மாதம் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படியிருக்கும் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஜூன் தொடக்கத்தில் மேஷத்தில் ராகு, சுக்கிரன், புதன், ரிஷபத்தில் சூரியன், துலாம் ராசியில் கேது, மகரத்தில் சந்திரன், மீன ராசியில் குரு, செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன.ஜூன் 3ம் தேதி புதன் வக்ரம் முடிவுக்கு வருகிறது. ஜூன் 5ம் தேதி கும்ப ராசியிலேயே சனி வக்ர பெயர்ச்சி, ஜூன் 15ம் தேதி சூரியன் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஜூன் 18ல் ரிஷபத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சி, ஜூன் 27ல் செவ்வாய் மேஷ ராசிக்கு பெயர்ச்சி, 12 ராசிக்கான பலனைப் பார்ப்போம்.துலாம், விருச்சிகம்,தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் நிகழும்மேஷம்செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே... ஜூன் மாதம் உங்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. விரைய ஸ்தானத்தில் உள்ள செவ்வாயும் குருவும் இணைந்து குரு மங்கள யோகத்தை தந்து கொண்டிருக்கின்றனர். விபரீத ராஜயோகம் செயல்படப்போகிறது. மாத பிற்பகுதியில் செவ்வாய் உங்கள் ராசிக்கு வரப்போவதால் யோகங்கள் கை கூடி வரும்.திருமண சுப காரியம்சுப செய்திகள் தேடி வரும். வேலையில் புரமோஷனும் தேடி வரும் சம்பள உயர்வும் அதிகரிக்கும். பெண்களுக்கு அற்புதமான காலம். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.மாத பிற்பகுதியில் சுக்கிரன் உங்கள் ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி தன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். பண வரவு அதிகரிக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.பண வரவு அதிகரிக்கும்மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். படித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முதலீடு செய்யலாம். வெளிநாட்டில் வேலை கிடைக்கும். மனோ தைரியம் அதிகரிக்கும். வெற்றிகள் தேடி வரும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசி முடிவு செய்யலாம். குடும்பத்தில் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. களத்திர ஸ்தானத்தில் உள்ள கேதுவின் மீது விழுவது சுபம்.பதவிகள் தேடி வரும்அரசு வழியில் கவுரவப்பதவிகள் தேடி வரும். புதன் பகவானும் நல்ல நிலையில் பயணம் செய்வதால் நல்ல தனலாபம் கிடைக்கும். வங்கிக்கடன் உதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். பயணங்களில் வெற்றி உண்டாகும். வளர்ச்சியும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பூர்வ புண்ணியாதிபதி சூரியன் மூன்றாவது வீட்டிற்கு செல்கிறார். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். முருகப்பெருமான் அருளால் நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதம். செவ்வாய்கிழமை முருகப்பெருமானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

No comments:

Post a Comment