குரூப் 2, 2ஏ தேர்வு எழுதப்போகும் தேர்வர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சமூக இடைவெளி, சுய பாதுகாப்பு, சுத்தம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மைத் தேர்வுகள்
தமிழ்நாட்டில் 32 மையங்களில், காலை 9 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது.இந்த தேர்வு எழுத 15 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களை விட இந்த ஆண்டு 60 விழுக்காடு பட்டதாரிகள் அதிகமாக விண்ணப்பித்து இருப்பதாகவும் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.மாநிலம் முழுவதும் 32 நகரங்களில் 117 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும். மாலையில் நடைபெறும் தேர்வில் எந்த நேர மாற்றமும் இல்லை. தேர்வில் ஜெல் பேனா, பால் பாயிண்ட் பேனாக்களைப் பயன்படுத்தலாம். இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள், ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளன. அதற்குப் பிறகு முதன்மைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும். துறை ரீதியான பணி நியமனம் குறித்து மார்ச் 3ஆம் தேதி விரிவான அறிவிப்பு வெளியிடப்படும்.
இந்நிலையில் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் ஓடிஆர் () கணக்கு வாயிலாக ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தேர்வர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்:
முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதி தேர்வறையில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அதிகாரிகள் சரிபார்க்கும் போது மட்டும் முகக்கவசத்தை அகற்றி முகத்தை காட்ட வேண்டும்.செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சமூக இடைவெளி, சுய பாதுகாப்பு, சுத்தம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.தேர்வுக்குப் பயன்படுத்தும் சொந்தப் பொருட்களை, மற்ற தேர்வர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது. முறைகேடுகளில் ஈடுபடும் தேர்வர்கள் மீண்டும் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும். தேவைப்பட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
No comments:
Post a Comment