பொது தேர்வில் ஆப்சென்ட் ஆன 1.18 லட்சம் மாணவர்களின் நிலை குறித்து அறிக்கை தர கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு. - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, May 18, 2022

பொது தேர்வில் ஆப்சென்ட் ஆன 1.18 லட்சம் மாணவர்களின் நிலை குறித்து அறிக்கை தர கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு.

 கொரோனாவிற்கு பின் நடந்த அரசு பொது தேர்வில் ஆப்சென்ட் ஆன 1.18 லட்சம் மாணவர்களின் நிலை குறித்து அறிக்கை தர கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2019 ல் கொரோனா பரவல் துவங்கியது. தொடர்ந்து 2 ஆண்டுகளாக பள்ளி திறக்கப்படவில்லை. மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர். பள்ளி விடுமுறையால் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்று விட்டனர். பல மாணவர்கள் பிழைப்பிற்காக பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.


தற்போது நடக்கும் 10 ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொது தேர்வில் ஆப்சென்ட் எண்ணிக்கை 1.18 லட்சமாக உள்ளது. இதன்படி 10 ம் வகுப்பு படிக்கும்12 லட்சம் பேரில் 42,000, பிளஸ் 1 படிக்கும் 9 லட்சம் பேரில் 43,533,பிளஸ் 2ல் 10 லட்சம் பேரில்32,600என 1 லட்சத்து 18 ஆயிரத்து 133 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர்.


கொரோனாவிற்கு முன்னர் வரை நடந்த அரசு தேர்வுகளில் இறப்பு, இடைநிற்றல் என சொற்ப அளவிலேயே மாணவர் 'ஆப்சென்ட்' இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தேர்வு எழுத தகுதி பெற்ற 31 லட்சம் பேரில் 1.18 லட்சம் மாணவர் 'ஆப்சென்ட்' ஆனது கல்வித்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 


இடைநிற்றலை தவிர்க்கும் நோக்கில் பள்ளிக்கு தொடர்ந்து வராத மாணவர்கள் விபரம், வேலைக்கு சென்றால் அவர்களை பள்ளிக்கு அழைத்து வருதல், பிற காரணங்களை அறிந்து பள்ளிக்கு வரவைத்தல் பணிகளுக்காக கலெக்டர்கள் மூலம் அரசு விபரத்தை சேகரிக்கிறது, என்றார்.

No comments:

Post a Comment