இரவில் உலக அளவிலான செஸ் போட்டி, காலையில் 11வது பொதுத் தேர்வு... கலக்கும் மாணவர்! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, May 25, 2022

இரவில் உலக அளவிலான செஸ் போட்டி, காலையில் 11வது பொதுத் தேர்வு... கலக்கும் மாணவர்!

16 வயதான ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, செஸ் போட்டிகளில் தனது அபார திறமையின் வழியாக உலகையே வியப்புக்குள்ளாக்கி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் Chessable Masters Tournament முதல் போட்டியில் உலகின் நம்பர் 1 சாம்பியனான மேக்னஸ் கார்ல்சென்னைத் தோற்கடித்தார். அதன் காலிறுதி போட்டியில் சீனாவின் வெய் யி-யை (Wei Yi) தோற்கடித்தார். இந்நிலையில் நேற்று அரையிறுதி போட்டி நடைபெற்ற நிலையில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியையும் தோற்கடித்தார் பிரக்ஞானந்தா. இந்தப் போட்டி முடியும் போது நேரம் நள்ளிரவு 2 மணியாகிவிட்டது.

அடுத்து 7 மணிநேரத்தில் பிரக்ஞானந்தாவுக்கு 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற இருந்தது. போட்டி முடிந்த பிறகு அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி, “நீங்கள் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற விரும்புகிறீர்களா அல்லது டிங் லீரன் (Ding Liren) உடன் வெற்றி பெற விரும்புகிறீர்களா? இரண்டில் ஒன்றைதான் தேர்ந்தெடுக்க வேண்டும்.” சீனாவின் டிங் லீரன் உலகின் நம்பர் 2 சாம்பியன். அவரைத்தான் பைனல் போட்டியில் பிரக்ஞானந்தா எதிர்கொள்ளவிருக்கிறார். பிரக்ஞானந்தா சிரித்து கொண்டே, “நிச்சயமாக இறுதிப் போட்டியில் டிங் லீரனைத் தோற்கடிப்பதையே விரும்புவேன்” என்கிறார். “நான் 8.45-க்கு பள்ளியில் இருக்க வேண்டும். பொது தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது. அதனால் நான் தூங்க வேண்டும். தேர்வு நடக்கும் போது தூங்காமல் இருந்தால்தான் தேர்ச்சி பெற முடியும்” என ஜாலியாகத் தெரிவித்தார் பிரக்ஞானந்தா. பிரக்ஞானந்தா Twitter/@chesscom_in பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ், “கடந்த காலத்தில் பெரிய ஸ்கோர்கள் இல்லாத போதும் வலுவான போட்டியாளர்களை வெற்றி கொள்ளும் இவரின் திறமை அற்புதமானது. பெருமை கொள்கிறேன்” என வாழ்த்தியுள்ளார்.

No comments:

Post a Comment