10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகத்தை நிறுத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும் கூட பொதுத்தேர்வின் போது மின் தடை ஏற்படக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல ஊர்களில் மின்தடை ஏற்படுகிறது. அறிவிக்கப்படாத மின்வெட்டினால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து வருகின்றனர். பலரும் யுபிஎஸ் கை கொடுக்கிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் வியாழக்கிழமை தொடங்கி வருகிற 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 1 தேர்வு வருகிற 10ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வருகிற 6ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இதனிடையே பொதுத்தேர்வு தொடர்பாக அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றிக்கையில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகத்தை நிறுத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும் கூட பொதுத்தேர்வின் போது மின் தடை ஏற்படக்கூடாது.
பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகில் இருக்கும் மின்மாற்றிகளை ஆய்வு செய்ய வேண்டும். ஏதேனும் பழுதடைந்திருந்தால் உடனடியாக மாற்றம் செய்யவும் அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment