10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்குகிறது. அது போல் மே 6 முதல் பத்தாம் வகுப்புகளுக்கும் மே 10 ஆம் தேதி 11 ஆம் வகுப்புகளுக்கும் பொது தேர்வு நடைபெறுகிறது.பொதுவாக இந்த பொதுத் தேர்வுகள் மார்ச் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்துவிடும். ஆனால் கொரோனாவால் பள்ளிகளுக்கு நேரடி வகுப்புகள் தாமதமாக திறக்கப்பட்டதால் பொதுத் தேர்வுகளும் தாமதமாக அறிவிக்கப்பட்டன.கொரோனா பரவலுக்கு பிறகு முதல் முறையாக பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான கொரோனா வழிகாட்டும் நெறிமுறைகளை தேர்வுத் துறை பின்பற்றி வருகிறது. இதனிடையே பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறையில் முகக் கவசம் அணிய வேண்டுமா என்ற குழப்பம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டது. இவர்களின் குழப்பத்தை போக்கும் வகையில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியுடன் தேர்வு நடத்தப்பட்டாலும் முகக் கவசம் அவசியம்.மாணவர்கள், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் என அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment