தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, மூன்று தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு துறையில்,இளநிலை அறிவியல் அலுவலர் பதவியில், 72 இடங்கள்; நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட உதவியாளர் பதவிக்கு, நான்கு இடங்கள்; ஆராய்ச்சி உதவியாளர் பணியில் ஆறு இடங்களை நிரப்ப, போட்டி தேர்வுகள் ஏற்கனவே நடத்தப்பட்டன.
இதற்கான, விடை திருத்தம் முடிந்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்களும், சான்றிதழ் சரிபார்ப்பு தேதியும் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
No comments:
Post a Comment