TNPSC - குரூப் 4, விஏஓ தேர்வு: ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ்.அகாதெமி நடத்தும் இலவச பயிற்சி - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, April 21, 2022

TNPSC - குரூப் 4, விஏஓ தேர்வு: ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ்.அகாதெமி நடத்தும் இலவச பயிற்சி


aatchi.JPG?w=360&dpr=3

குரூப்-4 தேர்வுக்கு ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு சென்னை நந்தனத்தில், வருகிற 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முழுநேரமாக நடைபெறுகிறது என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-


ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு ஜூலை 24-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து குரோம்பேட்டையில் பயிற்சிகளை முன்னெடுத்து வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி, தற்போது சென்னை நந்தனத்தில் புதிய பயிற்சி வகுப்புகளை தொடங்க இருக்கிறது.


ஒரு நாள் இலவச பயிற்சி

குரூப்-4 தேர்வர்களுக்கு வழிகாட்டும் வகையில், இந்த ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, டி.என்.பி.எஸ்.சி முன்னாள் தலைவர் ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ் வழிகாட்டுதலில் நடைபெறுகிறது.

இந்த  வகுப்பில் பொதுத்தமிழ் பாடத்தில் 100 சதவீத மதிப்பெண்களை  உறுதியாக பெறுவதற்கான உத்திகளை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமி இயக்குநர் ச.வீரபாபு தெளிவாக விளக்குகிறார். மேலும், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியை சேர்ந்த அனுபவமிக்க பயிற்சியாளர்களால், கணிதம் மற்றும் பொது அறிவு பாடங்கள் கற்றுத்தரப்படும்.

வருகிற 24-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முழுநேரமாக நடைபெற உள்ள, இந்த ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு சென்னை நந்தனத்தில் புதிதாக துவங்கியுள்ள ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் வைத்து நடைபெறும்.


குரூப்-4 வழிகாட்டி இலவசம்

குரூப்-4 தேர்வுக்கான ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ‘டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 வழிகாட்டி’ எனும் புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.  இந்த புத்தகம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.


முன்பதிவு செய்க

குரூப்-4 தேர்வுக்கான ஒரு நாள் முழுநேர இலவச பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், ‘GROUP-IV ONE DAY FREE COACHING' என்று டைப் செய்து,  9962664441  என்ற எண்ணுக்கு தங்கள் பெயர் மற்றும் முகவரியை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி, முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 9962996072, 9962664441, 9962668884 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ்.அகாதெமி இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment