MBBS சிறப்பு கலந்தாய்வு நிலவரம் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, April 8, 2022

MBBS சிறப்பு கலந்தாய்வு நிலவரம்

``` ```

கலந்தாய்வு தமிழக மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த 257 எம்பிபிஎஸ் இடங்கள் சிறப்பு கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன. இன்னும், 80-க்கும் மேற்பட்ட பிடிஎஸ் இடங்கள் காலியாக இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளிலும் பல் மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள இடங்களுக்கான 3 சுற்றுக் கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின. வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான இடஒதுக்கீட்டில் காலி இடங்கள், தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரியில்``` ``` 50 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் காலி இடங்கள் என மொத்தம் 257 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்படவில்லை. அரசுக் கல்லூரிகளில் 7, சுயநிதிக் கல்லூரிகளில் 40 இடங்கள் இருந்தன. அந்த இடங்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பை மருத்துவக் கல்வி தோ்வுக் குழு இயக்குநா் டாக்டா் வசந்தாமணி வெளியிட்டாா். விண்ணப்பப்பதிவு வியாழன், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தகுதியானவா்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு பட்டியல் வெளியிடப்பட்டது. எம்பிபிஎஸ் இடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு விட்டதாகவும், 80-க்கும் அதிகமான பிடிஎஸ் இடங்கள் மட்டும் காலியாக இருப்பதாகவும் டாக்டா் வசந்தாமணி தெரிவித்தாா்.``` ```

No comments:

Post a Comment