தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள், மற்றும் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், சுய நிதி பள்ளிகளில் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் (RTE – Right To Education), வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்தோர்களின் குழந்தைகளுக்கு என LKG அல்லது ஒன்றாம் வகுப்புகளில் 25% இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் நேற்று முதல் (ஏப்ரல் 20) தொடங்கி மே 18 வரை பெறப்படுகின்றன. இதற்கான அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட பள்ளிகள், மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இணையதளம் மூலமாகவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், வட்டார அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் எப்படி இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.
ஸ்டெப் 1
முதலில் தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ இணையதளமான என்ற இணையத்தளத்திற்குள் செல்லவும்.
ஸ்டெப் 2
அதன்பின் திறக்கும் பக்கத்தில் தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்கள் இருக்கும். அதனை படித்து, அந்த ஆவணங்களை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
தேவையான ஆவணங்கள்
மாணவரின் புகைப்படம், மாணவரின் பிறப்பு சென்டர், பெற்றோர்களின் அடையாளச் சான்றுகள், முகவரி சான்றுகள், வருமானச் சான்றிதழ் , சாதி சான்றிதழ், மற்றும் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
No comments:
Post a Comment