பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மட்டும் இத்துறையை சார்ந்தது என்பதால் அது தொடர்பாக கீழ் கண்டவாறு தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
01.04.2003 அன்றோ . அதன் பின்னரோ முறையான அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட ' வல்லுநர் குழு தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது. அவற்றை நன்கு பரிசீலித்து உரிய முடிவினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும் என்று அரசு சார்பு செயலாளர் அரசு ஊழியர் சங்கங்களுக்கு பதில் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment