எரிக்கும் வெயில்! குழந்தைகளை வதைக்க வேண்டாம்! ஆல்பாஸ் பண்ணுங்க! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, April 30, 2022

எரிக்கும் வெயில்! குழந்தைகளை வதைக்க வேண்டாம்! ஆல்பாஸ் பண்ணுங்க!

 தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எரிக்கும் வெயிலில் குழந்தைகளை வதைக்க வேண்டாம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், 9 வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் கோடை காலம் உச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது இருக்கும் நிலையில் பகல் நேரங்களில் மிகக் கடுமையாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 3 நாட்களுக்கு வெப்ப அலை காரணமாக அதிகபட்ச வெப்பநிலை பதிவாகலாம் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், பள்ளி குழந்தைகளை வதைக்க வேண்டாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ராமதாஸ் அறிக்கை


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாட்டில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கத்திரி வெயில் காலத்திலும் இயங்கும்; மே 13-ஆம் தேதி வரை பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் தவிர மற்ற வகுப்புகளுக்கும் கொளுத்தும் வெயிலில் பள்ளிகளை நடத்துவது மனித உரிமை மீறல் ஆகும். கொரோனா காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது உண்மை தான். ஆனால், அதையே காரணம் காட்டி குழந்தைகள் பயிலும் வகுப்புகளுக்குக் கூட மே 13-ஆம் தேதி வரை வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனரகம் பிடிவாதம் பிடிப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும்.


வறட்டுப் பிடிவாதம்


துயரத்தையும், துன்பத்தையும் அனுபவிப்பவர்களுக்குத் தான் அதன் வலி தெரியும் என்பர். அதே போல் சுட்டெரிக்கும் வெயிலில் வகுப்புகள் நடத்தப்படுவதால் அனுபவித்து வரும் கொடுமைகளை மாணவர்கள் மட்டும் தான் அறிவார்கள். தமிழ்நாட்டில் 8 நகரங்களில் வெப்பநிலை 100டிகிரி பாரன்ஹீட்டை கடந்து தகிக்கிறது. மே மாதம் 4-ஆம் தேதி முதல் தொடங்கும் கத்திரி வெயில் காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை சென்னையில் 44 டிகிரி செல்சியசையும், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் 46 டிகிரி செல்சியசையும் தாண்டக்கூடும் என்று வானிலை ஆய்வு வல்லுனர்கள் கணித்துள்ளனர். இத்தகைய சூழலில் பள்ளிகளை மே 13&;ஆம் தேதி வரை நடத்த வேண்டிய தேவை என்ன? இது வறட்டுப் பிடிவாதமாகவே பார்க்கப்படும்.


செங்கல் சூளைக்குள் குழந்தைகள்


பள்ளிகளில் இருக்கும் மின் விசிறிகளும் மின்வெட்டு, பழுது உள்ளிட்ட காரணங்களால் இயங்குவதில்லை. அதனால், செங்கல் சூளைக்குள் இருப்பது போன்ற சூழலில் 3 வயது, 4 வயது குழந்தைகளால் 8 மணி நேரம் எவ்வாறு அடைந்து கிடக்க முடியும்? இன்னும் பல பள்ளிகளில் குடிப்பதற்கு குடிநீர் கூட இல்லை. இத்தகைய கொடுமையான சூழலில் மழலையர் மற்றும் தொடக்க வகுப்புகளைக் கூட நடத்துவது ஏன்? அதன் மூலம் நாம் கல்வியில் எதை சாதிக்கப் போகிறோம்? என்பதே என் வினா.குழந்தைகளின் அவதிபள்ளிக்கல்வித் துறையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரிகளுக்கு குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகள் புரிவதில்லை. பள்ளிகளை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதியில் தங்களின் அலுவலகங்களை சொகுசுபடுத்திக் கொள்ளும் உயரதிகாரிகளுக்கு பள்ளி வகுப்பறைகளில் மின்விசிறிகள் கூட இல்லை என்ற உண்மை தெரியாததால் தான் இத்தகைய முடிவுகளை எடுத்து குழந்தைகளை வதைக்கிறார்கள். பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகளை எந்த வசதிகளும் இல்லாத வகுப்பறைகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அமர வைத்தால் தான் குழந்தைகளின் அவதியை அறிவார்கள்.விடுமுறை அளிக்க வேண்டும்கொரோனா நான்காவது அலை, கொளுத்தும் கோடை வெயில் ஆகிய இரட்டை ஆபத்துகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கியதால் கல்வித்தரம் எந்த வகையிலும் குறைந்து விடவில்லை. மாணவர்கள் நலன் கருதி 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்க வேண்டும்; அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.அதேபோல், கல்லூரிகளுக்கும் குறைந்தபட்சம் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை அளிக்க வேண்டும்." என கூறியுள்ளார்

No comments:

Post a Comment