கல்லூரி மாணவர்களை வகுப்பறைக்கே சென்று சந்தித்த காவல்துறை அதிகாரிகள் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, April 6, 2022

கல்லூரி மாணவர்களை வகுப்பறைக்கே சென்று சந்தித்த காவல்துறை அதிகாரிகள்

``` ```

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், திருவல்லிக்கேணி உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் மாநிலக்கல்லூரி மாணவர்களிடம் படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்பாடும் பாதிப்புகள் குறித்து அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேருந்து படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதன் ஆபத்து குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த, சென்னை, பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவிட்டதின்பேரில், காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ``` ```நேரில் சென்று, மாணவர்களுக்கு பேருந்தின் படியில் தொங்கியபடி பயணம் செய்வதன் ஆபத்து குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, திருவல்லிக்கேணி சரக உதவி ஆணையாளர் எம்எஸ் பாஸ்கர் தலைமையிலான காவல் குழுவினர் இன்று (06.04.2022) காலை, மாநிலக்கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் படிக்கட்டில் பயணம் செய்வதால் உயிரிழப்பு, கை, கால் அடிப்பட்டு உடல் ஊனம் உள்ளிட்ட ஆபத்துகள் நிகழக்கூடும் எனவும், எனவே இது போன்று பேருந்து படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்வதும், ஓடிச் சென்று ஏறுவது போன்ற சாகசங்கள் செய்வதும் ஆபத்தை விளைவிக்கும் எனவும், இந்தியாவின் எதிர்கால தலைமுறையாகிய மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தி, முன்னேற வேண்டும் எனவு காவல் குழுவினர் அறிவரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காவல் குழுவினரின் அறிவுரைகளை ஏற்று, பேருந்தின் படியில் பயணம் செய்யாமல், கல்வியில் கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேறுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.``` ```

No comments:

Post a Comment