திருநெல்வேலி: அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலுக்கு இதமாக மழை பெய்தாலும் பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெப்பநிலை பதிவாகிறது. வெப்ப மயக்கம், சிறுநீர் கடுப்பு உள்ளிட்ட கோடை கால நோய்களில் இருந்து தப்பிக்க நமது ஒன் இந்தியா வாசகர்களுக்காக பிரத்யேக ஆலோசனைகளை வழங்கியுள்ளார் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி அறுவை சிகிச்சைத் துறையின் பேராசிரியர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா.மனித உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்துவது மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் என்னும் பகுதி நம்முடைய உடலின் வெப்பநிலை 98.4 பாரன்ஹீட் அளவில் இருக்கும்.வெயில் காலத்தில் சுற்றுப் புற வெப்பம் 106 டிகிரி பாரன்ஹீட் அதிகமாகும்போது உடல் தளர்ச்சி அடையும் களைப்பு உண்டாகும் உடலை குளிர்விக்க தோல் அதிகமாக வியர்வை சுரப்பிகள் தண்ணீர் தாகம் அதிகமாக இருக்கும்.வெப்ப மயக்கம்தலைவலி வாந்தி தலைசுற்றல் மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும் அளவுக்கு மீறிய வியர்வையின் காரணமாக உடலிலிருந்து சோடியம் பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற பல உப்புகள் வெளியேறிவிடுவதால் உடல் வெப்ப தளர்ச்சி( ) அடைகின்றது. இதன் தொடர்ச்சியாக உடலில் உள்ள இரத்த குழாய்கள் அதிகமாக விரிவடைந்து ரத்தம் தேங்குகிறது இதயத்திற்கு வருகின்ற இரத்தம் குறைந்து ரத்த அழுத்தமும் குறைகிறது. இதனால் மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைப்பதில்லை இதன் விளைவாக பாதிக்கப்பட்டவர் மயக்கமடைந்து கீழே விழுவர், இந்நிலைக்கு வெப்ப மயக்கம் என்று பெயர்.
முதலுதவி அவசியம்
வெப்ப மயக்கத்தினால் பாதிக்கப்பட்டவரை நல்ல காற்றோட்டமான இடத்தில் படுக்க வைத்து அவருடைய கால்களை சற்று உயரமாக தூக்கி வைக்க வேண்டும், உடலிலுள்ள வியர்வையை துடைத்து எடுக்கவும் ,அவர் நினைவில் இருந்தால் குளுக்கோஸ் கலந்த பழச்சாறுகள் கொடுக்கவேண்டும் ,மயக்க நிலையிலே இருந்தால் குளுக்கோஸ் இரத்த நாளங்களில் கொடுக்க வேண்டியது அவசியம், ஆகவே தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.வெயில் காலத்தில் சிறுநீர் கடுப்புகோடை காலத்தில் அதிக வியர்வை வெளியேறுவதால் சிறுநீர் வெளியேறுவது சற்று குறைந்துவிடும், ஆகவே கார தன்மையுடன் இருக்கின்ற சிறுநீர் அமிலத் தன்மைக்கு மாறிவிடும் ஆகவே அதிகமான தண்ணீரை குடிக்க வேண்டும். ஒரு சிலருக்கு சிறுநீர் மூலம் வெளியேற்ற ப்படுகின்ற உப்புகள் கடினமாகி சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப் பாதையில் படிகங்களாக படிந்து சிறுநீரக கல் உண்டாகும் இதனாலும் சிறுநீர் கடுப்பு ஏற்படும் சிறுநீர் கடுப்பு உள்ளவர்கள் அதை சற்று குறைத்துக் கொண்டு தண்ணீர் நன்றாக குடிக்க வேண்டும். வெட்டிவேர் ஊற வைத்த குடிநீர் நன்னாரி வேர் ஊற வைத்த குடிநீர் சீரகக் குடிநீர் சிறந்தது.களைப்பை நீக்கும் உணவுகள்பானகரம் ரொம்ப நல்லது. ஒருகைப்பிடி புளி, எலுமிச்சை சாறு, வெல்லம் ,சுக்கு ஏலம், இவற்றை தேவையான தண்ணீரில் நன்றாகக் கலந்து அவ்வப்போது குடித்து வர வேண்டும் இது சிறுநீர் கடுப்பு வராமல் பாதுகாக்கும் அதி வியர்வையினால் ஏற்பட்ட களைப்பையும் நீக்கும். சுரைக்காய், தர்பூசணி, இளநீர் ,கிர்ணி பழம், வெள்ளரிக்காய், சிட்ரஸ் வகை பழங்கள், வாழைத்தண்டு, முள்ளங்கி காய், இவைகளை உணவில் அதிகமாக சேர்க்க வேண்டும்.கோடை காலத்தில் பழங்கள் ரொம்ப நல்லதுகோடைகாலத்தில் குழந்தைகளுக்கான உணவுகளை வீட்டில் கொடுக்கும் பொழுது அதிக அளவில் காய்கறிகள் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் குறிப்பாக வெள்ளரிக்காய் கேரட் பீட்ரூட் தர்பூசணி பழம் கிர்ணி பழம் ஸ்ட்ராபெர்ரி வாழைப்பழம் ஆப்பிள் நுங்கு இளநீர், சிட்ரஸ் வகை பழங்கள், போன்றவைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் மதிய வேளையில் தயிர் அல்லது மோரை சிறிது சர்க்கரை சேர்த்து லஸ்ஸியாக குடிக்கலாம்.பிறந்த குழந்தைகளுக்குபிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் தாய்ப்பாலில் அதிக அளவு நீர்ச் சத்து, குழந்தைகளின் வளர்ச்சிக்கான விட்டமின்கள் தாதுக்கள் நிறைந்து காணப்படும்.
குழந்தைகளுக்கு எது நல்லது
குழந்தைகளை நண்பகலில் 12 மணி முதல் 4 மணி வரை வெளியே விளையாட அனுமதிக்காமல் இருப்பது மிகவும் நல்லது. வெயில் காலங்களில் காலை மாலை இருவேளை உடம்புக்கு குளிக்க வைப்பது மிகவும் நல்லது, இது அதி வியர்வையினால் வருகின்ற தோல் வறட்சி ஊரல், இவைகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும்.
No comments:
Post a Comment