வருகிறது டெல்லி ஸ்டைல் மாதிரி பள்ளி! தமிழகத்தில் கல்வி, மருத்துவத்துக்கு முக்கியத்துவம்! முதல்வர்! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, April 1, 2022

வருகிறது டெல்லி ஸ்டைல் மாதிரி பள்ளி! தமிழகத்தில் கல்வி, மருத்துவத்துக்கு முக்கியத்துவம்! முதல்வர்!

``` ```


 தமிழகத்தில் மற்ற துறைகளை விட கல்வி மற்றும் மருத்துவத்துறைக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள மாதிரி பள்ளிகளை போன்று தமிழ்நாட்டிலும் விரைவில் மாதிரி பள்ளி உருவாக்கப்படும்'' என முதல்வர் முக ஸ்டாலின் கூறினார்.டெல்லியில் திமுக சார்பில் அண்ணா-கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது.``` ``` இந்த அறிவாலயம் நாளை திறக்கப்பட உள்ளது.இதற்கான ஏற்பாடுகள் திமுக சார்பில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திறப்பு விழாவில் கூட்டணி கட்சியினர் மற்றும் பிற மாநில தோழமை கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'கெஜ்ரிவாலுடன், ஸ்டாலின்இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். நேற்று பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி ஆகியோரை ஸ்டாலின் சந்தித்து திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து அழைப்பு விடுத்தார். மேலும் அங்குள்ள மொகல்லா கிளினிக், மேற்கு வினோத் நகரில் உள்ள மாதிரி பள்ளியை அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து ஸ்டாலின் பார்வையிட்டார்.விளக்கிய அதிகாரிகள்அப்போது அவரை வரவேற்கும் வகையில் தமிழில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பள்ளியில் உள்ள நவீன வசதிகள் குறித்து அதிகாரிகள் ஸ்டாலினுக்கு விளக்கி கூறினர்.``` ``` இந் வேளையில் கல்வி தொடர்பாக பல்வேறு விஷயங்களை இருதரப்புக்கும் இடையே விவாதிக்கப்பட்டன.அதிக நிதி ஒதுக்கீடுஅதன்பிறகு ஸ்டாலின் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் பிற துறைகளை காட்டிலும் பள்ளி கல்வி, மருத்துவத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கி பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் மாடர்ன் பள்ளி செயல்பட்டு வருவதை கேள்வி பட்டேன். இதை பார்க்க வேண்டும் என முடிவெடுத்து வந்தேன். ரொம்ப சிறப்பாக உள்ளது.விரைவில் தமிழகத்தில்விரைவில் இதுபோன்ற மாடர்ன் பள்ளிகள் தமிழகத்தில் துவங்கப்படும். சென்னையில் முதற்கட்டமாக திறக்க நிதி ஒதுக்கி உள்ளோம். இந்த பள்ளி நிகழ்ச்சிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்தேன். டெல்லி மக்கள் சார்பில் கலந்து கொள்ள வேண்டும் என்றேன். அவர் வருவதாக கூறியுள்ளார்'' என்றார்.நேரலையில் வரவேற்கிறேன்முன்னதாக முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛கல்வி மட்டுமே சிறந்த சமுதாயத்தையும், சக்தி வாய்ந்த நாட்டையும் உருவாக்க உதவும். நாடு முழுவதும் கல்வி புரட்சியை ஏற்படுத்துவோம். டெல்லியில் அரசு பள்ளிக்கு பார்வையிட வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரலையில் வரவேற்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார். மேலும் இருவரும் பள்ளியை பார்வையிட்டது நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

``` ```

No comments:

Post a Comment