சுகாதாரமற்ற உணவு வழங்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விடுதி: மாணவர்கள் அவதி - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, April 8, 2022

சுகாதாரமற்ற உணவு வழங்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விடுதி: மாணவர்கள் அவதி

``` ```நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனியே விடுதிகள் உள்ளன. இங்கு 3 வேளையும் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாணவர்கள் விடுதியில் இன்று காலை பூரி, கிழங்கு வழங்கப்பட்டது. அப்போது கிழங்கில் பல்லி இறந்து கிடப்பதை கண்டு, மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். விடுதி காப்பாளரிடம் இதுகுறித்து, மாணவர்கள் முறையிட்டனர். தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் மருது குட்டியை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர். இது குறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘சமீப காலமாக விடுதியில் வழங்கப்படும் உணவு சரியாக இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன் உணவில் கரப்பான் பூச்சி கிடந்தது. இதுகுறித்தும் புகார் தெரிவிக்கப்பட்டது. சுத்தமான உணவு வழங்க பல்கலைக்கழக, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மாணவர்கள் கூறினர் . பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தற்போது விடுதியில் சமையல் காண்ட்ராக்டர் மாற்றுவதா அல்லது மாணவர்களே ஹாஸ்டல் விடுதியை நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்று பல்கலைக்கழக பதிவாளர் மருது குட்டி கூறினார்``` ```

No comments:

Post a Comment