```
```
மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET – National Eligibility cum Entrance Test) இந்த ஆண்டு ஜூலை 17 அன்று நடக்கவிருக்கிறது. அதற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு ஆன்லைனில் எப்படி அப்ளை செய்வது என்பதை பார்க்கலாம்.
Online Registration (Representational Image)
தயாராக எடுத்து வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்:
– பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
– போஸ்ட்கார்டு சைஸ் போட்டோ (இரண்டுமே வெள்ளைநிற பின்புறத்துடன் இருக்க வேண்டும்)```
```
– கையெழுத்து
– கைரேகை
– ஓபிசி/EWS/மற்ற வகுப்புச் சான்றிதழ்
– 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
– 12-ம் வகுப்பு முடித்திருப்பவர்கள் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
எப்படி அப்ளை செய்வது?
ஸ்டெப் 1
– என்ற வெப்சைட்டுக்கு செல்லவும். அங்கு Registration for NEET (UG) – 2022 என்ற பகுதி காட்டப்படும். இதனை க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.
ஸ்டெப் 2
– உள்ளே சென்றதும் புதிதாக ஒரு பக்கம் திறக்கும். அதில் New Registration என்ற பகுதியை க்ளிக் செய்யவும். அடுத்து திறக்கப்படும் பக்கத்தில் அப்ளை செய்வதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை உள்வாங்கிப் படித்த பின், கீழே இருக்கும் click here to proceed என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
Medical Course
ஸ்டெப் 3
– க்ளிக் செய்த பின் திறக்கும் பக்கத்தில் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள், தொலைபேசி எண்,```
``` மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி மற்றும் உங்களின் அடையாள அட்டை ஏதேனும் ஒன்றின் விவரங்கள் கேட்கப்படும். அதனை மிக சரியாகப் பார்த்து, அனைத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை செக் செய்த பின் நிரப்பவும். இதில் உங்கள் registration-க்கான password கேட்கப்படும். அதனை கவனமாகக் கொடுத்த பின் submit பட்டனை அழுத்தவும். அதன் பின் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுமாறு கூறப்படும். மீண்டும் ஒருமுறை சரிபார்த்த பின் Submit and Send OTP என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 4
– அதன் பின் திறக்கப்படும் பக்கத்தில் உங்களுடைய OTP கேட்கப்படும் இடத்தில், உங்களுடைய அலைபேசி எண்ணுக்கு வந்திருக்கும் OTP யை உள்ளிடவும். தொடர்ந்து Submit Registration Form என்ற பகுதியை க்ளிக் செய்தால். உங்களுடைய Registration முழுமையடைந்துவிடும். உங்களுக்கான register ID மற்றும் password-ஐ குறித்து வைத்துக்கொள்ளவும்.
ஸ்டெப் 5
– தொடர்ந்து Application form-ஐ நிரப்ப வேண்டும். Application form-ல் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள், ஆதார் அட்டையின் விவரங்கள், தேர்வு எழுதும் இடம், கல்வி விவரங்கள், மற்ற விவரங்கள், அதன் பின் ஆவணங்கள் பதிவேற்றம் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கவனமாக நிரப்பவும். ஒவ்வொரு பகுதியும் முடியும் முன் விவரங்களை சரிபார்த்த பின் submit and next கொடுத்து விவரங்களை நிரப்பிக்கொள்ளவும்.
ஸ்டெப் 6
– ஆவணங்கள் பதிவேற்றம் பகுதியில் உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ்```
``` புகைப்படம், கைரேகை மற்றும் போஸ்ட்கார்டு சைஸ் போட்டோ போன்றவை 10kb – 200kb (jpg) அளவிலும், உங்கள் கையெழுத்து 4kb – 30kb (jpg) அளவிலும், பத்தாவது மதிப்பெண் சான்றிதழ் 50kb – 300kb (pdf) என்ற அளவிலும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
நீட் தேர்வு
ஸ்டெப் 7
– பதிவேற்றம் முடிந்த பின் save & next என்ற பகுதியை க்ளிக் செய்த பின், அப்பக்கத்தில் உங்களுடைய விவரங்கள் காண்பிக்கப்படும். அவற்றில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றால் அவற்றை திருத்திய பின் அனைத்தையும் ஒருமுறை செக் செய்து கொள்ளவும். செக் செய்த பின் particulars checklist to be verified என்ற இடத்தில செக் செய்த அனைத்தையும் டிக் அடித்த பின் declaration படித்துப் பார்த்து I agree என்று கொடுக்கவும். பின், final submission of application-ஐ க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 8
– அடுத்து இமெயில் ஐடி-ஐ சரிபார்க்க, உங்களுடைய இமெயில் விவரத்தை உள்ளிடவும். பின் உங்கள் இமெயில் ஐடி-க்கு OTP அனுப்பப்படும். அதனை உள்ளிட்ட பின் உங்கள் இமெயில் ஐடி சரிபார்க்கப்படும். தொடர்ந்து click here to go home என்பதை க்ளிக் செய்யவும்.
Doctor (Representational Image)
ஸ்டெப் 9
– தற்போது நீங்கள் தேர்வுக்கான பணத்தை செலுத்த வேண்டும். பணத்தை உங்களுடைய டெபிட், கிரெடிட் மற்றும் Paytm ஐடி மூலமாக செலுத்தலாம். பணம் செலுத்திய பின் உங்களுடைய அப்ளிக்கேஷன் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும்.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மே 6-ம் தேதி கடைசி நாள். நீட் விண்ணப்பத்திற்கான கட்டணத்தை மே 7, இரவு 11.50 மணி வரை செலுத்தலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது உச்ச வரம்பு ஏதும் இல்லை.
வாழ்த்துகள் மாணவர்களே!```
```
1-5 std guide | CLICK HERE |
9 std guide | CLICK HERE |
10 std guide | CLICK HERE |
11 std guide | CLICK HERE |
12 std guide | CLICK HERE |
Thursday, April 7, 2022
New
நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விணப்பிப்பது எப்படி?
About Kalviupdate
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
NEET
Tags
NEET
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment