சென்னையில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, April 20, 2022

சென்னையில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்


சென்னை: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறபட்டு உள்ளதாவது: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வருகிற 22-ம் தேதி (நாளை வெள்ளிக்கிழமை) அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அமைந்துள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். இதில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை தேர்வுசெய்ய உள்ளன. இந்த முகாமில், 8-ம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடித்தவர்கள், ஐடிஐ, பாலிடெக்னிக் படித்தவர்கள், கலை அறிவியல் உள்பட அனைத்து பட்டதாரிகள் கலந்துகொள்ளலாம். வயது 30-க் குள் இருக்க வேண்டும். படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு அதில் கூறப்ப்ட்டு உள்ளது.

No comments:

Post a Comment