டெல்லி : சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து ஜனநாயகம், பன்முகத்தன்மை, அணிசேரா இயக்கம், பனிப்போர் காலம், ஆப்ரோ-ஆசியப் பகுதிகளில் இஸ்லாமியப் பேரரசுகளின் எழுச்சி ஆகியவை வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திட்டங்களில் இருந்து நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சென்ட்ரல் போர்ட் ஆஃப் ஸ்கூல் எஜுகேஷன் எனப்படும் மத்திய அரசின் பாடத்திட்டன் படி இந்தியாவின் ஆயிரக்கணக்கான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. 1950ல் மத்திய அரசு பணியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த பாடத்திட்டம் இந்தியா முழுவதும் அமலில் உள்ளது. இதனால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் தடையின்றி கல்வி பெற இது உதவியது.
சிபிஎஸ்சி நீக்கம்
கடந்த ஆண்டுகளில் பல சிக்கல்களில் , சர்ச்சைகளிலும் சிபிஎஸ்இ தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது 11ஆம் 11ஆம் வகுப்புகளின் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திட்டங்களில் இருந்து சிபிஎஸ்இ கைவிட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளின் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திட்டங்களில் இருந்து பல ஆண்டுகளாக கற்பிக்கப்பட்டு வந்த சில பாடத்திட்டங்களை தற்போது சிபிஎஸ்இ கைவிட்டுள்ளது.
மீண்டும் சர்ச்சை
அணிசேரா இயக்கம், பனிப்போர் காலம், ஆப்ரோ-ஆசியப் பகுதிகளில் இஸ்லாமியப் பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு மற்றும் தொழில்துறை புரட்சி பற்றிய அத்தியாயங்களை அதேபோல், 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில், 'உணவு பாதுகாப்பு' என்ற தலைப்பில், 'உலகமயமாக்கல் விவசாயத்தின் தாக்கம்' என்ற தலைப்பு கைவிடப்பட்டுள்ளது. 'மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல் - வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு' பகுதியில் ஃபைஸ் அகமது ஃபைஸின் உருது மொழியில் இரண்டு கவிதைகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பகுதிகளும் இந்த ஆண்டு பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
ஜனநாயகம் - பன்முகத்தன்மை
மேலும் 'ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை' என்ற உள்ளடக்கமும் நீக்கப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு வரலாற்று பாடத்திட்டத்தில் கைவிடப்பட்ட "மத்திய இஸ்லாமிய நிலங்கள்" பகுதியில் ஆப்ரோ-ஆசிய பிரதேசங்களில் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி மற்றும் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் அதன் தாக்கங்கள் பற்றி விளக்குகிறது. அதில் இஸ்லாத்தின் தோற்றம், கலிபாவின் எழுச்சி மற்றும் பேரரசு உருவாக்கம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.
முகலாயர் நீதிமன்றம் நீக்கம்
இதேபோல், 12 ஆம் வகுப்பு வரலாற்று பாடத்திட்டத்தில், 'முகலாயர் நீதிமன்றம்: வரலாற்றை மறுகட்டமைத்தல்' என்ற தலைப்பில் கைவிடப்பட்ட பகுதியில் முகலாயர்களின் சமூக, மத மற்றும் கலாச்சார வரலாற்றை மறுகட்டமைக்க முகலாய நீதிமன்றங்களின் வரலாற்றை விரிவாக கூறியிருந்தது. இத்தகைய பாடத்திட்டங்கள் கைவிடப்பட்டதன் பின்னணியில் உள்ள காரணத்தைக் கேட்டபோது, இந்த மாற்றங்கள் பகுத்தறிவின் ஒரு பகுதியாகும் என்றும், தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் () பரிந்துரைகளுக்கு இணங்க இவ்வகை தலைப்புகள் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும் சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீண்டும் பெரிய சர்ச்சை
பல ஆண்டுகளாக பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த முக்கிய தலைப்புகளை பாடத்திட்டத்தில் இருந்து சிபிஎஸ்இ கைவிடுவது முதல் முறை அல்ல. இதேபோல் பலமுறை முக்கிய தலைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த முறை 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் கூட்டாட்சி, குடியுரிமை, தேசியவாதம் மற்றும் மதச்சார்பின்மை பற்றிய தலைப்புகள் மதிப்பீட்டீன் போது கருத்தில் கொள்ளப்படாது என்று 2020ஆம் ஆண்டு சிபிஎஸ்இ அறிவித்தது, பெரிய சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment