தென் தமிழகப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, April 8, 2022

தென் தமிழகப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு

``` ```சென்னை: வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு தென் தமிழகப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “உள் தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, 8.4.2022, 9.4.20220 இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் வட தமிழகம் மற்றும் புதுவை,``` ``` காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 10 ஆம் தேதி மற்றும் திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்தநாளான 11 ஆம் தேதி தென் தமிழகம், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்” என்று கூறப்பட்டுள்ளது``` ```

No comments:

Post a Comment