மாற்றுத்திறனாளிகளுக்கு நல்லதொரு வாய்ப்பு! தமிழக அரசு வழங்கும் தொழில்முனைவோர் பயிற்சி! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, April 3, 2022

மாற்றுத்திறனாளிகளுக்கு நல்லதொரு வாய்ப்பு! தமிழக அரசு வழங்கும் தொழில்முனைவோர் பயிற்சி!

``` ```

 


மாற்றுத்திறனாளிகளுக்கு நல்லதொரு வாய்ப்பாக தமிழக அரசு தொழில்முனைவோர் பயிற்சிகள் வழங்கவுள்ளது.மாற்றுத்திறனாளிகள் சுயதொழில்களில் ஈடுபடவும், சிறு, குறு தொழில்களில் அடியெடுத்து வைக்கவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மானியமோ, கடனோ பெற உதவுவது குறித்தும் அதில் விளக்கப்படவுள்ளது.இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழக அரசுதமிழக அரசு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை, தமிழ்நாட்டில் துவங்குவதற்கும், திறம்பட நடத்துவதற்கும் தொழில்முனைவோர்களை உருவாக்கவும்,``` ``` பல்வேறு திட்டங்களையும், பயிற்சிகளையும், செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையகரகம் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக லோன் மேளா, தனியார்துறையில் வேலைவாய்ப்பு முகாம்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளை தொழில் முனைவோர் ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.சுய தொழில்மாற்றுத்திறனாளிகள் சுயதொழிலில் ஈடுபட வங்கிக் கடனுதவியும் ஏற்பாடு செய்யப்படுகிறது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் சுயதொழில்களில் ஈடுபடவும், சிறு, குறு தொழில்களில் அடியெடுத்து வைக்கவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூபாய் 25,000 மானியம் அல்லது கடன் தொகையில் மூன்றில் ஒருபகுதி மானியமாகவும், கடன் பெற்று, சுயதொழில் தொடங்க உதவி வருகிறது.பெட்டிக்கடைமாற்றுத் திறனாளிகள் இந்த மானியத்துடன் கூடிய கடன் பெற்று சிறிய பெட்டிக்கடை, மளிகைக் கடைகள், பேன்சி ஸ்டோர்கள், பால்மாடு வளர்த்தல், ஆடு வளர்த்தல், டீக்கடை மற்றும் நொறுக்குத்தீனி ஸ்டால்கள்,``` ``` இட்லி கடைகள், டிபன் கடைகள், கணிணி மையங்கள். ஜெராக்ஸ் நகலகம் ஆகியவற்றை தொடங்கி பயனடைந்து வருகின்றனர்.தொழில் முனைவோர்தமிழக தொழில் முனைவோருக்கான கல்வி மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை () யின் கீழ் செயல்படும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (() சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது.படிற்சி முகாம்தொழில் முனைவோருக்கான பயிற்சிகளை அவ்வப்பொழுது இந்நிறுவனம் நடத்தி வருகிறது. இப்பயிற்சிகள், திட்ட அறிக்கைகள் தயாரிக்கவும், இறுதி செய்யவும், கடன் பெறவும், புதிய தொழில் முனைவோருக்கு உறுதுணையாக இருக்கிறது. இத்திட்டத்தினை மாற்றுத் திறனாளிகள் முழுமையாகப் பயன்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட உதவிடும் வகையில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் இணைந்து முதற்கட்டமாக 79 நபர்களுக்கு மூன்று அணிகளாக, 442022">4.4.2022

முதல் 6.4.2022, 11.4.2002 முதல் 13.4.2022 மற்றும் 18.4.2002 முதல் 20.4.2022, ஆகிய நாட்களில் திட்ட பொருளாதார திறன், திட்ட அறிக்கை தயாரித்தல், திட்ட மதிப்பீடு செய்தல், வங்கிக் கடன் பெறுதல் போன்ற இனங்களில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து, அதன் மூலம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.: மாற்றுத்திறனாளிகளுக்கு நல்லதொரு வாய்ப்பாக தமிழக அரசு தொழில்முனைவோர் பயிற்சிகள் வழங்கவுள்ளது.:``` ```

No comments:

Post a Comment