வினாத்தாள் கசிவு? தேர்தலுக்கு உரிய முக்கியத்துவத்துடன் பொது தேர்வுகள்! அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, April 4, 2022

வினாத்தாள் கசிவு? தேர்தலுக்கு உரிய முக்கியத்துவத்துடன் பொது தேர்வுகள்! அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

``` ```

 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு கணித வினாத்தாள் கசிந்த விவாகரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தலுக்கு உரிய முக்கியத்துவத்துடன் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிபட தெரிவித்துள்ளார்.பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் கணிதத் தேர்வு வினாத்தாள் சமூகவலைதளத்தில் திடீரென வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தேர்வுக்கு இரு வினாத் தாள் தயாரிக்கப்பட்டு கடைசி நேரத்தில் ஒரு வினாத்தாள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் , இரு வினாத்தாள்களும் வெளியானது கூடுதல் கேள்விகளை எழுப்பியது. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிஇந்த விவாகரத்தில் சட்டரீதியாகும், ``` ```துறை ரீதியாகவும் விசாரணை நடத்தப்பட்டு குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார். இந்நிலையில்தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு விரைவில் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில் அதற்கு தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைககள் தொடர்பான ஆலோசனைகள் கூட்டமானது சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்,மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தேர்வுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இத கூட்டத்தில் திருப்புதல் தேர்வில் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் பொதுத்தேர்வை எந்தவிதமான சச்சரவுக்கு இடம் தராமல் பாதுகாப்புடன், உரிய வழிமுறைகளை பின்பற்றி நடத்த அமைச்சர் அறிவுறுத்தினார்.புதிய பள்ளி கட்டிடங்கள்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் பாழடைந்த பள்ளிக்கட்டிடங்களில் ஏற்கனவே 10 ஆயிரம் கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் மீதம் இருக்கக்கூடிய கட்டிடங்களும் இடிக்கப்படும். ``` ```அந்த பள்ளி வளாகங்களில் பயின்று வந்த மாணவர்கள் அருகாமையிலுள்ள வாடகை கட்டடங்களில் அவர்கள் கல்வி பயில்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுஉரிய முக்கியத்துவம்திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் இரண்டாவது முறையாக வெளியாகி இருக்க கூடிய நிலையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . நீட் தேர்வுக்கு தயாராக அரப்பள்ளி மாணவர்களுக்குவாயிலாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மாநில புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அதற்குரிய குழு அமைக்கப்படும். பொதுத்தேர்வை பொறுத்தவரையில் எந்த வித சச்சரவுகளுக்கும் இடமின்றி பொதுத்தேர்தலுக்கு உரிய முக்கியத்துவத்துடன் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும்." என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார்

``` ```

No comments:

Post a Comment