திருப்பத்தூர்: வகுப்பறையில் படுக்கை... ஆசிரியரை அசிங்கமாக திட்டி குத்த முயன்ற மாணவன் சஸ்பெண்ட் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, April 21, 2022

திருப்பத்தூர்: வகுப்பறையில் படுக்கை... ஆசிரியரை அசிங்கமாக திட்டி குத்த முயன்ற மாணவன் சஸ்பெண்ட்


திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியரை அசிங்கமாக திட்டி மிரட்டி தாக்க முயன்ற மாணவனை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். ஆசிரியரை திட்டி தாக்க முயன்ற மாணவர் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அந்த பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகப் சஞ்சய் பணியாற்றி வருகிறார்.இவர் வகுப்பறையில் இருந்த மாணவர்களிடம் ரெக்கார்ட் நோட்டை சமர்ப்பிக்கும் படி கேட்டுள்ளார். இதனை சில மாணவர்கள் பொருட்படுத்தாமல் நோட்டை சமர்ப்பிக்காமல் இருந்தனர். 

 படுத்து உறங்கிய மாணவன் 


 இந்நிலையில் நேற்று வகுப்பறைக்கு சென்ற ஆசிரியர் சஞ்சய் ரெக்கார்டு நோட்டு சமர்ப்பிக்காத மாணவர்களை சமர்பிக்குமாறு கூறினார். ஒரு மாணவன் வகுப்பறையில் சட்டையை கழற்றி விட்டு பாய் போட்டு படுத்துக்கொண்டிருந்தான். அந்த மாணவனை எழுப்பி ரொக்கார்ட் நோட்டை சமர்பிக்குமாறு கூறினார். 

 

ஆசிரியருக்கு மிரட்டல்



  அப்போது அந்த மாணவன் ஆசிரியரை ஆபாசமாக பேசினான். தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டே ஆசிரியரின் அருகில் சென்றார். ஓங்கி குத்த முயன்றனர். சில மாணவர்கள் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் பேசினர். 

 ஆசிரியர் அதிர்ச்சி


  மாணவர்களின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறினார்‌. இந்த நிகழ்வு பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த விவகாரம் குறித்து மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வேலன் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். 

 மாணவன் சஸ்பெண்ட்


 

இந்த நிலையில் இன்று காலை வாணியம்பாடி உதவி கலெக்டர் காயத்ரி சுப்பிரமணி மற்றும் ஆம்பூர் தாசில்தார் பழனி ஆகியோர் மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் வேலனிடம் சம்பவம் தொடர்பாக கேட்டறிந்தனர். பின்னர், பள்ளி ஆசிரியரை அவதூறாக பேசி தாக்க முயன்ற மாணவர்களிடம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் ஆசிரியரை தாக்க முயன்ற மாணவன் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். 

 கடும் நடவடிக்கை தேவை சமீபகாலமாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் தகாத முறையில் நடந்து கொள்வதும் ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment