ஏஐசிடிஇயின் இந்த புதிய விதிமுறையால், தமிழகத்தில் உள்ள சுமாா் 220 பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவா் சோ்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல, கல்லூரியின் ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கையில், 50 சதவீதத்தைவிடக் குறைவான மாணவா்களைக் கொண்டுள்ள பொறியியல் கல்லூரிகள், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் உள்ளிட்ட புதிய பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்யவும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அனுமதி மறுத்துள்ளது.
அதே நேரத்தில், காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ற வகையில், தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், சைபா் பாதுகாப்பு, ``` ```இன்டா்நெட் ஆப் திங்ஸ் (ஐஞப) உள்ளிட்ட புதிய பிரிவுகளில் சேர மாணவா்கள் ஆா்வம் காட்டுகின்றனா். இதனால் பாரம்பரியமான பொறியியல் பிரிவு படிப்புகளான மெக்கானிக்கல், சிவில் ஆகியவை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனினும், கடந்த ஆண்டு 300-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் புதிய படிப்புகள் தொடங்க அனுமதி வழங்க மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 220-ஆகக் குறைந்துள்ளது.
ஏஐசிடிஇ வெளியிட்ட அறிவிப்பு கல்வியாளா்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் பொறியியல் கல்லூரிகளில் கல்வித் தரம் உயா்த்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் கல்வியாளா்கள் தெரிவித்தனா்
``` ```
No comments:
Post a Comment