சென்னை:சுபகிருது வருடம் சித்திரை மாதம் 09ஆம் தேதி வெள்ளிக்கிழமை 22.4.2022. இன்று பிற்பகல் 12.25 மணி வரை சஷ்டி திதி.பின்னர் சப்தமி. இன்று அதிகாலை 01.15 மணி வரை மூலம் நட்சத்திரம். பின்னர் இரவு 11.34 மணி வரை பூராடம். பிறகு உத்திராடம். கார்த்திகை, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
.மேஷம்
வெளிநாடு சென்றவர்கள் சொந்த நாடு திரும்புவார்கள். குழுவில் கிடைக்கும் பணத்தை பெண்கள் கணவனுக்கு கொடுப்பார்கள். ஆலயத் திருப்பணிகளில் ஈடுபாடு காட்டுவீர்கள். தகப்பனாரின் ஆசையை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்திற்கு தேவையான வசதிகளை பெருக்குவீர்கள். மனைவி மக்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
ரிஷபம்
எந்தக் காரணம் கொண்டும் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள். நல்ல நண்பராக இருந்தாலும் சாட்சி வைத்து பணத்தை கொடுங்கள். கேஷ் கவுண்டரில் வேலை செய்பவர்களுக்கு அதிக கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டு சேர்க்க வேண்டாம். தொழிலில் போட்டி வந்தாலும் அனுசரித்துப் போய்விடுங்கள். பணம் நகைகளை பத்திரமாக வைத்திருங்கள்.
மிதுனம்
தடைபட்ட திருமணங்கள் தானாக கூடிவரும். வேலையிடத்தில்
உயரதிகாரிகள் உற்சாகம் கொடுப்பார்கள். அரசு வேலைகள் தடங்கல் இல்லாமல் நடக்கும். சுப நிகழ்ச்சிகளால் குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். தொழிற்சாலைகளின் உற்பத்தி பெருகும். இடையூறாக இருந்த போட்டிகள் இடம் தெரியாமல் மறையும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்
கடகம்
வீம்பாக எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். அன்பானவர்கள் கூட அம்பாக மாறி குத்துவார்கள். தொழில் துறைகள் மந்த நிலையில் இருக்கும். நடைபாதை வியாபாரிகள் மழையினால் சிரமப்படுவார்கள். விவசாயத் தொழிலில் முனைப்புக் காட்டுவீர்கள். கொடுக்கல் வாங்கல் தொழில் சிக்கலை ஏற்படுத்தும். கேட்ட இடத்தில் உதவிகள் தாமதமாகவே கிடைக்கும்.
சிம்மம்
எளிய முறையில் வியாபாரம் செய்து பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் கல்வி திறனால் பெருமையடைவீர்கள். கல்லூரி விழாக்களில் கலந்து கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் உங்களுக்கு வந்து சேரும். நிலம் வாங்கி விற்கும் வியாபாரம் சிறப்பாக நடக்கும். சிறிய முதலீட்டில் சிறப்பான பலனை அடைவீர்கள். பணப்பற்றாக்குறை அகலும்
.கன்னி
அன்னையின் ஆசியால் அனைத்து நன்மைகளையும் பெறுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உங்களைத் தேடி வரும். அரசாங்க வேலையில் சேருவீர்கள். சுணக்கமாக இருந்த தொழில் துடிப்புடன் ஏற்றம் காணும். உங்கள் பேச்சுத்திறன் மற்றவர்களை கவர்ந்து இழுக்கும். கருத்து வேற்றுமை இருந்த கணவன் மனைவியை சேர்த்து வைப்பீர்கள்.
துலாம்
அதிரடியான முயற்சிகளில் இறங்குவீர்கள். அதற்குரிய பலன் குறைவாகவே கிடைக்கும். சகோதர உறவுகள் சாதகமாக இருக்காது. அரசு வேலையில் இருப்பவர்கள் சிரத்தையுடன் பணி செய்வீர்கள்.
பதவி உயர்வு காத்திருக்கிறது. அலைச்சல் அதிகமானாலும் ஆர்டர்கள் பெறுவதில் குறை இருக்காது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருங்கள்.
விருச்சிகம்
நிலம் வாங்கிப் பத்திரப் பதிவு செய்வீர்கள். தடைபட்ட வீட்டு வேலைகள் மளமளவென நடக்கும். பங்குச்சந்தை வியாபாரம் சிறப்பாக இருக்கும். தொழில் போட்டிகளை துடைத்து ஒளி பீர்கள்.நகை வாங்கி கொடுத்து மகளையும் மருமகனையும் மகிழ்ச்சி படுத்துவீர்கள். தேடி வந்த உறவுகளை நல்ல முறையில் உபசரிப்பீர்கள். நீண்ட கால கடன்கள் வசூலாகும்.
தனுசு
ஒரு நாளில் முடிய வேண்டிய காரியம் சில நாட்களுக்கு இழுத்தடிக்கும்.வேலையில் கவனமாக இல்லாவிட்டால் அரசு ஊழியர்கள் தண்டனைக்கு ஆளாவார்கள். வில பிரச்சினைகள் சுலபத்தில் தீராது. நியாயமாக பேசினாலும் மனத்தாங்கல் உண்டாகும். அதை மீறும் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பீர்கள்.வியாபாரத்திற்கு ஏதாவது இடையூறு வந்து கொண்டே இருக்கும்.
மகரம்
இல்லத்தரசிகள் ஏட்டிக்குப் போட்டியாக நடப்பார்கள். உடல் ரீதியாக சின்ன சின்ன உபாதைகளை சந்திப்பீர்கள். கடன் பிரச்சினைகள் கைமீறி கவலையை கொடுக்கும். பணிச் சுமைகளால் தூக்கம் கெடும். எதிர்பார்த்த வேலை தள்ளிப்போகும்.
போட்டி பந்தயங்களில் இருந்து விலகி இருங்கள். அனாவசிய செலவுகளைத் தவிர்த்து விடுங்கள்.
கும்பம்
தைரியமாக செயலாற்றி தலை நிமிர்ந்து நடப்பீர்கள். திட்டமிட்டபடி தொழில்துறைகள் லாபமாக நடக்கும். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் பார்ப்பார்கள். விவசாயத் தொழில் மேன்மையடையும். புதிய வாகனங்களை தவணை முறையில் வாங்குவீர்கள். பெற்றோர் பேச்சை பிள்ளைகள் மீற மாட்டார்கள்.இழுபறியாக இருந்த திருமணப் பேச்சுவார்த்தை கைகூடிவரும்.
மீனம்
போட்டி பந்தயங்களில் அபார வெற்றி பெறுவீர்கள். மாணவர்களின் சாதனை கல்லூரிகளில் பாராட்டப்படும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். கடன் சுமைகள் கட்டுக்குள் இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை தரும். சுவையான உணவுகளை ரசித்து மகிழ்வீர்கள். பங்குச் சந்தை லாபம் உயரும். பகை விலகி நட்புக்கள் மலரும். நளினமாக பேசி காரியம் சாதிப்பீர்கள்.
No comments:
Post a Comment