இன்ஜினியரிங் அட்மிஷன் பதிவு அண்ணா பல்கலை தேதி அறிவிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, April 28, 2022

இன்ஜினியரிங் அட்மிஷன் பதிவு அண்ணா பல்கலை தேதி அறிவிப்பு

 அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லுாரிகளில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 450க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், பி.இ., - எம்.இ., உள்ளிட்ட படிப்பு களுக்கு, 'ஆன்லைன் கவுன்சிலிங்' வழியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும். வவரும் கல்வி ஆண்டு கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.அதேநேரம், அண்ணா பல்கலை வளாக கல்லுாரிகளில் பொது கவுன்சிலிங் இல்லாமல், வேறு ஒதுக்கீடுகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். 


இந்த சேர்க்கையை, அண்ணா பல்கலையே நேரடியாக நடத்தும். அதற்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவுக்கான, உத்தேச அட்டவணையை, அண்ணா பல்கலை நேற்று வெளியிட்டது.அதன் விபரம்:தொழில் நிறுவனங்களுக்கான ஒதுக்கீட்டில், பி.இ., - பி.டெக்., சேர்க்கைக்கு, ஜூன் 24ல் விண்ணப்ப பதிவு துவங்கி, ஜூலை 15ல் முடிகிறது. 


பிற மாநில பிரிவினருக்கு, ஜூலை 6; வெளிநாடுவாழ் தமிழரான என்.ஆர்.ஐ., பிரிவினருக்கு, ஜூன் 24ல் விண்ணப்ப பதிவு துவங்க உள்ளது.வஎம்.எஸ்சி., ஐந்தாண்டு படிப்புக்கு, ஜூன் 22; தொழில் துறை ஒதுக்கீடுக்கு, ஜூன் 26; வெளிநாடு வாழ் பிரிவினருக்கு, ஜூன் 27ம் தேதியும்; எம்.சி.ஏ., - எம்.பி.ஏ., படிப்புகளில் தொழில் துறை ஒதுக்கீடுக்கு ஜூன் 15; எம்.சி.ஏ., பிற மாநிலத்தவருக்கு, ஜூன் 15 மற்றும் வெளிநாடு வாழ் பிரிவினருக்கு, ஜூன் 27ம் தேதியும் விண்ணப்ப பதிவு துவங்க உள்ளது.


எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., படிப்பில் தொழில் துறை ஒதுக்கீடுக்கு, ஜூலை 31; வெளிநாடு வாழ் பிரிவினருக்கு, ஜூலை 27ம் தேதியும் விண்ணப்ப பதிவு துவங்க உள்ளது. கூடுதல் விபரங்களை, admissions.annauniv.edu/ என்ற இணையதளத் தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment