புதுக்கோட்டையை சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் முத்து . இவர் கடந்த 2006 - ம் ஆண்டில் பணி வரன்முறை செய்யப்பட்டார். ஆனால் 2004 - ம் ஆண்டில் இருந்து தனது பணியை வரன்முறை செய்து உரிய பணப்பலன்களை வழங் கக்கோரிய மனு கல்வி அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது . அதை ரத்து செய்யும்படி , மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி , மனுதாரரின் பணி நியமனம் கல்வித்துறை பணி நியமன விதிமுறைகளின்கீழ் வராது என அரசு வக்கீல் தெரிவித்துள்ளார் . முதுநிலை ஆசிரியர்கள் வாரத்துக்கு 14 மணி நேரம் மட்டும் பணியாற்றி ,``` ``` ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுகின்றனர் . அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. ஆசிரியர் தொழில் புனிதமானது தற்போது ஆசிரியர்கள் பாலியல் தொல்லையில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன . ஆசிரியர்களின் நடத் தையை பள்ளிக்கு உள்ளேயும் , வெளியேயும் உரிய அதிகா ரிகளால் கண்காணிக்கப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் . எனவே தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் நடத்தை , கற்பித்தல் திறனை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.``` ``` இந்த உத்தரவுக்கு எதிராக ஆசிரியர் முத்து , மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பரேஷ் உபாத் யாய் , விஜயகுமார் ஆகியோர் விசாரித்தனர். முடிவில் , இந்த வழக்கில் ஆசிரியர்கள் சம்பந்தமாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் நீக்கப்படுகின்றன. ஆனால் மனு தாரரின் கோரிக்கை மீது தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி இந்த மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
``` ```
No comments:
Post a Comment